Bangladesh : தேச துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட துறவி.. ஆதரவுக்கு யாரும் வராதது ஏன்?
Chinmoy Krishna Das | சின்மோய் கிருஷ்ண தாஸ் என்பர் ஒரு இந்து துறவி ஆவார். இவர் இந்து சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தார். இதன் காரணமாக அவர் தேச துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக வாதடியா ராமன் ராய் என்ற வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார்.
வங்கதேசத்தில் இஸ்லாமியர்களால் அச்சுறுத்தப்பட்ட, சிறுபான்மை இந்துக்களின் உரிமைகளுக்காக போராடிய இந்து துறவி ஒருவர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதாரவாக வழக்காட எந்த வழக்கறிஞர்களும் முன்வரவில்லை. காரணம், அந்த இந்து துரவிக்கு ஆதரவாக வாதாடிய அவரது முன்னாள் வழக்கறிஞர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த இந்து துரவிக்கு ஆதரவாக வழங்கறிஞர்கள் வாதாட வராதது ஏன், அந்த இந்து துறவி தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Hyderabad : சாதி மறுப்பு திருமணம்.. பெண் காவலரை கொலை செய்த அண்ணன்.. அதிர்ச்சி சம்பவம்!
தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட துறவி
சின்மோய் கிருஷ்ண தாஸ் என்பர் ஒரு இந்து துறவி ஆவார். இவர் இந்து சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தார். இதன் காரணமாக அவர் தேச துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக வாதடியா ராமன் ராய் என்ற வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். அதுமட்டுமன்றி, அவரது வீட்டையும் இஸ்லாமியர்கள் சூரையாடினர். இதை சின்மோய் முன்பு அங்கம் வகித்த இஸ்கான் அமைப்பு ஊடகத்திற்கு தெரிவித்தது. சின்மோய் கிருஷ்ண தாஸ் முன்பு ஒரு கிருஷ்ண துறவியாக இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அந்த அமைப்பு அவரிடம் இருந்து விலகிக் கொண்டது. இருப்பினும் அவர், தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அந்த அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : Vijay Statement : தொடர்ந்து மக்களை கைவிடும் அரசு!.. பெஞ்சல் பாதிப்பு குறித்து விஜய் அறிக்கை!
துறவிக்கு வழங்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனை
சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக வாதாட எந்த வழக்கறிஞர்களும் வராத நிலையில், அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வங்கதேசம், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடாக உள்ள நிலையில், அங்கு இந்து துரவிக்கு ஆதரவாக பேச யாரும் முன்வரவில்லை. துரவிக்கு எதிராக கண்டனங்களும், மிரட்டல்களும் அதிகரித்துள்ள நிலையில், அவர் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கண்களில் படாமல் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். சின்மோய் கிருஷ்ண தாஸின் முன்னாள் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை மனதில் வைத்துக்கொண்டு எந்த வழக்கறிஞரும் வாதாட முன் வராத நிலையில், இந்து துரவிக்கு ஆதரவாக வாதாட கூடாது என மிரட்டல் விடும் வகையில் அவ்வப்போது சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க : IND vs AUS: அடிலெய்டு ஸ்டேடியத்தில் கலக்கல்..! விராட் கோலி படைத்த சாதனைகள் இவ்வளவா?
தொடர்ந்து அச்சுறுத்தப்படும் இந்து துறவி
சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் அடுத்த விசாரணை வரும் ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்க தேசத்தில் உள்ள முஸ்லீம் வக்கில்கள், முன்னதாக தாஸுக்கு ஆதாரவாக வாதாடிய சக வழக்கறிஞர்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் சின்மோய் கிருஷ்ண தாஸின் தகவல் தொடர்பு குழு கூறியுள்ளது. இந்து துரவி தாஸ் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மற்றும் அவருக்கு தொடர்ந்து விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் வங்க தேசத்தில் பெரும்பான்மை வகிக்கும் இஸ்லாமியர்கள் அங்குள்ள சிறுபான்மை இந்துக்களின் குரலை அடக்கும் முயற்சி என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.