Nobel Prize: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு.. யார் இவர்கள்? - Tamil News | Nobel Prize in Economic Sciences goes to Daron Acemoglu, Simon Johnson and James A. Robinson tamil news | TV9 Tamil

Nobel Prize: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு.. யார் இவர்கள்?

நோபல் பரிசு: 2024ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. டாரன் அசேமொக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் செழிப்புக்கு நிறுவனங்கள எவ்வாறு கட்டமைப்படுகின்றன? அவை வளர்ச்சியில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? என்பதன் ஆராய்ச்சிக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Nobel Prize: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு.. யார் இவர்கள்?

நோபல் பரிசு அறிவிப்பு

Updated On: 

14 Oct 2024 16:29 PM

ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரம், இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி என பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்தந்த துறைகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை படைத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நடப்பாண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, 2024ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டாரன் அசேமொக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு:

ஒரு நாட்டின் செழிப்புக்கு நிறுவனங்கள எவ்வாறு கட்டமைப்படுகின்றன? அவை வளர்ச்சியில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? என்பதன் ஆராய்ச்சிக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அசெமோக்லு, சைமன் ஜான்சன் மற்றும் ஜேம்ஸ் ராபின்சன் ஆகியோர் நாட்டின் செழிப்புக்கு நிறுவனங்களின் முக்கியத்துவத்தை நிரூபித்துள்ளனர்.

This year’s laureates in the economic sciences have helped us understand differences in prosperity between nations.

Daron Acemoglu, Simon Johnson and James Robinson have demonstrated the importance of societal institutions for a country’s prosperity. Societies with a poor rule… pic.twitter.com/2KEQCasik2

— The Nobel Prize (@NobelPrize) October 14, 2024

Also Read: ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல்.. 4 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி

பலவீனமான சட்டம் கொண்ட நாடுகள் மற்றும் மக்களைச் சுரண்டும் நிறுவனங்கள் வளர்ச்சி அடையவோ அல்லது மாற்றத்தை உருவாக்கவோ இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்பான ஆய்வுகளையும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். உலகின் 20 சதவீத பணக்கார நாடுகள் இப்போது ஏழைகள் 20 சதவீதத்தை விட 30 மடங்கு பணக்காரர்களாக உள்ளனர்.

பணக்கார மற்றும் ஏழ்மையான நாடுகளுக்கு இடையிலான வருமான இடைவெளியும் தொடர்ந்து உள்ளது என்று ஆய்வில் கூறியுள்ளனர். மேலும், ஏழ்மையான நாடுகள் பணக்காரர்களாக மாறினாலும், அவை மிகவும் வளமான நாடுகளை எட்டவில்லை ஏன்? என்பதையும் இவர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

2024 நோபல் பரிசு வென்றவர்கள் யார்?

2024ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியலை நோபல் அகாடமி வெளியிட்டிருக்கிறது. அதன்படி இயல்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்களை சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. வேதியலுக்கான நோபல் பரிசு  அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஜான் ஜம்பர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

புரத்தங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக இவர்கள் வழங்கப்பட்டது. உடவியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா விஞ்ஞானிகள் விக்டர் அம்பரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. மைக்ரோஆர்என்ஏவின் கண்டுபிடிப்பு மற்றும் மரபணு ஒழுங்குமுறை ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த நிஹான் ஹிடாங்கியோ என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு உலக நாடுகளை அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Also Read: வேற லெவல்… அனைத்து வேலைக்கும் ரோபோ வந்தாச்சு.. வைரல் வீடியோ!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரியா பெண்ணிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் எழுத்தாளரான ஹான் காங்கிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நோபல் பரிசு புகழ்பெற்ற வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபல் என்பவர் நினைவாக இப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 1895 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டாலும், 1901 ஆம் ஆண்டு தான் முதல்முறையாக நோபல் பரிசு முதல்முறையாக வழங்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நோபல் பரிசுகள் வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி ஆல்ஃபிரட் நோபல் நினைவுத் தினம் அன்று வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கும் அமேசான்!
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?