‘ரெட் லிப்ஸ்டிக்கிற்கு தடை” மீறினால் அவ்வளவுதான்… எங்கு தெரியுமா? - Tamil News | | TV9 Tamil

‘ரெட் லிப்ஸ்டிக்கிற்கு தடை” மீறினால் அவ்வளவுதான்… எங்கு தெரியுமா?

Published: 

14 May 2024 12:27 PM

வடகொரியாவில் பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரெட் லிப்ஸ்டிக்கிற்கு தடை மீறினால் அவ்வளவுதான்... எங்கு தெரியுமா?

ரெட் லிப்ஸ்டிக்கிற்கு தடை

Follow Us On

வடகொரியாவில் பெண்களுக்கு கட்டுப்பாடு:

உலகில் மற்ற நாடுகளில் இருந்து தனித்து இருக்கும் நாடு வடகொரியா தான். அங்கு கிம் ஜாம் உன் அதிபராக இருக்கும் நிலையில், அவர் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். அவ்வப்போது பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறார். அரசின் கட்டுப்பாடுகளை தாண்டி, சிலரின் தனிப்பட்ட விஷயத்திலும் தலையீட்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். குறிப்பாக, பெண்கள் அழகு சாதனங்களிலும், ஆடைகளிலும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அதாவது, கறுப்பு ட்ரெஞ்ச கோட், ஜாங் உன்னின் சிகேட்சர் ஸ்வீப்ட் பேக் ஹேர் ஸ்டல் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளன.  மேலும்,  அந்நாட்டில் தயாரிக்கப்படும் மேக்கப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த முடியும் போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த வரிசையில் தற்போது மற்றொரு கட்டுப்பாடுகளையும் வடகொரியா விதித்துள்ளது.

சிவப்பு நிறம் லிப்ஸ்டிக்கிற்கு தடை:

தற்போது வடகொரிய அரசு சிவப்பு நிற லிப்ஸ்டிக் எனக்கு உதட்டுச் சாயத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறம் கம்யூனிசத்துடன் வரலாற்றுத் தொடர்பைக் கொண்டிருந்தாலும், முதலாளித்துவத்தின் அடையாளமாக கருதுவதால் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போடுவதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டிருக்கும்  பெண்களின் கண்களை பார்ப்பதை விட உதட்டை பார்ப்பது தான் அதிகம் என்று வடகொரியா கருதுகிறது.

Also Read : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த போராட்டம்… 100 பேர் காயம்..என்ன நடக்கிறது?

அதுமட்டுமன்றி சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை பெண்கள் பூசுவது கவர்ச்சிகரமாக இருக்கும் என்பதாலும், அடக்கமாக மற்றும் எளிமையாக இருக்க வேண்டும் என்ற விதியை மீரும் வகையில் இருப்பதாலும், இந்த சிவப்பு லிப்ஸ்டிக் இருப்பதால் தடை செய்யப்படுகிறது. எனவே, வடகொரியாவின் சட்டத்தின்படி பெண்கள் குறைந்த அளவிலான மேக்கப் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. அதிகப்படியான கேக்கப் வட கொரியாவில் வெறுக்கப்படுகிறது மற்றும் மேற்கத்திய செல்வாக்கின் அடையாளமாக கருதப்படுகிறது. வடகொரியால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை மீறினால் தண்டிக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம். மேலும், விதிகளை மீறியவர்களின் ஆடைகளை பொது இடங்களில் கிழிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

Also Read : புதினின் அதிரடி மூவ்! பாதுகாப்பு துறைக்கு புதிய அமைச்சர்.. இதுதான் காரணமா?

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version