5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Open AI-க்கு எதிராக புகார்.. முன்னாள் ஊழியர் மர்ம மரணம்.. யார் இந்த சுசீர் பாலாஜி?

Who is Suchir Balaji : செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI இன் முன்னாள் ஆராய்ச்சியாளரான சுசீர் பாலாஜி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான சுசீர் பாலாஜி சான் பிரான்சிஸ்கோவின் புக்கானனில் உள்ள அவரது குடியிருப்பில் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Open AI-க்கு எதிராக புகார்.. முன்னாள் ஊழியர் மர்ம மரணம்.. யார் இந்த சுசீர் பாலாஜி?
சுசீர் பாலாஜி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 14 Dec 2024 17:59 PM

செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI இன் முன்னாள் ஆராய்ச்சியாளரான சுசீர் பாலாஜி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுசீர் பாலாஜியின் மரணம் நவம்பர் 26 அன்று சான்பிரான்சிஸ்கோ காவல்துறைக்கு தெரியவந்தது. 26 வயதான சுசீர் பாலாஜி சான் பிரான்சிஸ்கோவின் புக்கானனில் உள்ள அவரது குடியிருப்பில் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாட்டு ஊடகங்களின்படி, சுசீர் பாலாஜி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. சுசீர் பாலாஜியை அவரது நண்பர்கள் தொடர்பு கொண்டுள்ளனார்.

இளம் ஆராய்ச்சியாளர் மரணம்

ஆனால், சுசீர் பாலாஜி எந்த பதிலும் அளிக்காததால் அவரது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். நவம்பர் 26ஆம் தேதி மதியம் 1 மணியளவில் சான்பிரான்சிஸ்கோ போலீசார் சுசீ பாலாஜியின் லோயர் ஹைட்ஸ் இல்லத்திற்கு வந்து பார்த்தபோது அவர் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், எலோன் மஸ்க் உட்பட பலர் சமூக ஊடகங்களில் இந்த சம்பவத்திற்கு எதிர்வினையாற்றினர்.

ஓபன்ஏஐ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இன்று இந்த நம்பமுடியாத சோகமான செய்தியை அறிந்து நாங்கள் மனம் உடைந்தது. இந்த கடினமான நேரத்தில் சுசீரின் அன்புக்குரியவர்களுக்காக ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.

Also Read : ரூ.37 லட்சம் கோடியை தாண்டிய சொத்து மதிப்பு.. வரலாற்று சாதனை படைத்த எலான் மஸ்க்!

யார் இந்த சுசீர் பாலாஜி?

இந்தியாவைச் சேர்ந்தவர் சுசீர் பாலாஜி (26). இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும் போது OpenAI மற்றும் Scale AI குறித்து பயிற்சி பெற்றார். இதனைத் தொடர்ந்து ஓபன் ஏஐ நிறுவனத்தில் 4 ஆண்டுகள் சுசீர் பாலாஜி பணிபுரிந்தார்.

அதன்பிறகு சாட் ஜிபிடியை உருவாக்கியத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார் சுசீர் பாலாஜி. மேலும், Webgpt, GPT-4 போன்றவற்றிலும் பணியாற்றியுள்ளார். ஓபன்ஏஐ அமெரிக்க பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதாக சுசீர் பாலாஜி இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

Also Read : அதிபராக பதவியேற்கும் டிரம்ப்.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கிய மார்க் ஜூக்கர்பெர்க்!

அதாவது, காப்புரிமை தரவை ஓபன் ஏஐ நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்டோபர் மாதம், OpenAI பதிப்புரிமைச் சட்டத்தை மீறுவதாக சுசீர் பாலாஜி குற்றம் சாட்டியிருந்தார். அவர் கூறுகையில், “ChatGPT போன்ற தொழில்நுட்பங்கள் இணையத்தை சேதப்படுத்துகிறது.

நான் நம்புவதை நீங்கள் நம்பினால், நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும்” என்றார்.  இந்த சூழலில், கலிபோர்னியில் உள்ள அவரது வீட்டில் அவர் சடலமாக கிடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

Latest News