காலநிலை மாற்றத்தின் உச்சம்! வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலி.. ஆப்கானிஸ்தானில் சோகம்!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 200 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
200 பேர் உயிரிழப்பு:
வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், பாக்லான் மாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து, பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. வடகிழக்கு படாக்ஷான் மாகாணம், மத்திய கோர் மாகாணம் மற்றும் மேற்கு ஹெராத் ஆகிய பகுதிகளிலும் கடும் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், மாகாணங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பெரும் வெள்ளத்தில் சிக்கி 200 பேர் உயிரிழந்ததாவும், கடந்த 24 மணி நேரத்தில் 63 உயிரிழந்ததாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. பாக்லானில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாகவும், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : “ஆணுறை அணியாமல் பாலுறவு வைத்தார்” டிரம்ப் குறித்து நடிகை பரபர வாக்குமூலம்!
ஆப்கானிஸ்தானில் கடுமையான வெள்ளம்:
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம். காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலையை அறிவித்துள்ளோம். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தேவையான பொருட்களை வழங்கி வருகிறோம்” என்றார். ஆப்கானிஸ்தானில் 40 பில்லியனுக்கு அதிகமான மக்கள் தொகையில், 80 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். வெள்ளதால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
உலக நாடுகளில் காலநிலை தாக்கம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் மழை பெய்வதற்கும், வெள்ளம் ஏற்படுவதற்கும், இயல்பை விட வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும் காலநிலை மாற்றமே காரணம். கடந்தாண்டு இதுவரை சந்திக்காத கால பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்தன. அதேபோல இந்தாண்டு காலநிலை பிரச்னைகள் ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள எச்சரித்து வருகின்றனர். அதன்படி, வறண்ட நாடாக இருக்கும் ஆப்கானிஸ்தானில் காலநிலை மாற்றத்தால் 200 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : படிப்பிற்காக ஆஸ்திரேலியா செல்ல ப்ளானா? கொஞ்சம் கஷ்டம் தான்.. விசா பெற புது ரூல்ஸ்!