5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சிங்கப்பூரில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. மீண்டும் மாஸ்க் கட்டாயம்!

திடீரென சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மே 5ஆம் தேதி முதல் மே 11ஆம் தேதி 25,900க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் 13,700 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மே 5 முதல் 11ஆம் தேதி வரை 25,900 பாதிப்புகள் பதிவாகி உள்ளன. கொரோனா பாதிப்பில் நாள்தோறும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. மீண்டும் மாஸ்க் கட்டாயம்!
கொரோனா தொற்று (கோப்புப் படம்)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 19 May 2024 10:57 AM

சிங்கப்பூரில் உச்சமடையும் கொரோனா: கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகையை ஆட்டிப்படைக்க தொடங்கியது. தற்போது தான், உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்திருக்கிறது. இதற்கான முக்கிய காரணம் கொரோனா தடுப்பூசி என்றே சொல்லலாம். இருப்பினும், கொரோனா தொற்று உருமாறி கொண்டே இருப்பத உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது. இந்த நிலையில், திடீரென சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மே 5ஆம் தேதி முதல் மே 11ஆம் தேதி 25,900க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் 13,700 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மே 5 முதல் 11ஆம் தேதி வரை 25,900 பாதிப்புகள் பதிவாகி உள்ளன. கொரோனா பாதிப்பில் நாள்தோறும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது. மே 5ஆம் தேதிக்கு முன்பு நாள்தோறும் 181 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

Also Read : சிங்கப்பூரின் 4வது பிரதமராக பதவியேற்றார் லாரன்ஸ் வாங்.. அமைச்சரவையில் இடம்பெற்ற இந்தியர் யார்?

மாஸ்க் கட்டயாம்:

இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் ஓய் யே சுங் கூறுகையில், “நாம் கொரோனா அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். தற்போது சீராக உள்ளது. ஆனால், அடுத்த இரண்டு அல்லது நான்கு வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் அடையும். அதாவது, ஜூன் நடுப்பகுதி அல்லது ஜூன் இறுதிக்குள் கொரோன தொற்று அதிகரிக்கலாம்.

கொரோனா தொற்று பரவலைத் தடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் தட்டுபாடின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் கூடுதல் தடுப்பூசி போடவில்லையெனில் விரையில் அதை செலுத்த வேண்டும்.

மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டயாம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். தற்போதைய சூழலில் பொதுமுடக்கம் அறிவிக்கும் திட்டம் அரசிடம் இல்லை. கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்தால் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : பெரும் பரபரப்பு… பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு.. என்னாச்சு?

Latest News