5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

70,000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்.. பேரிடியாக அமைந்த 2024.. பகீர் ரிப்போர்ட்

பல்வேறு ஐடி நிறுவனங்கள் இந்தாண்டு இதுவரை 70 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

70,000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்.. பேரிடியாக அமைந்த 2024.. பகீர் ரிப்போர்ட்
டெக் ஊழியர்கள் பணிநீக்கம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 02 May 2024 13:42 PM

தொடரும் பணிநீக்கங்கள்:

பொருளாதார பிரச்னையால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளையும் குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் பல்லாயிரம் ஊழியர்களை பணீநீக்கம் செய்தது. 2024ஆம் ஆண்டில் பணிநீக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்கும் என்று எதிர்பார்த்தால், 2024ஆம் நிதியாண்டு தொடக்கத்தில் இருந்தே பணிநீக்கங்கள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், தான் ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளன. அதாவது, 2024ஆம் நிதியாண்டி தொடக்கத்தில் இருந்து தற்போது வரை சுமார் 70 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இதில் டெக் ஊரியர்கள் தான் அதிகம் பணிநீக்கம் செய்யப்பட்டாத அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. அதாவது, டெஸ்லா, கூகுள், ஆப்பளின் போன்ற ஐடி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது.

இந்த ஆண்டு இதுவரை 70 ஆயிரம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் இருந்து இதுவே பெரிய அளவிலான பணிநீக்கம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

70 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்:

அதன்படி, ஆப்பிள் நிறுவனம் 614 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. Python, Flutter மற்றும் Dart குழுக்களில் உள்ள பல பணியாளர்களை கூகுள் பணிநீக்கம் செய்தது. அமேசான் அதன் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

இன்டெல் தலைமையகத்தில் 112 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தில் 100 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பைஜூஸ் நிறுவனத்தில் பல்வேறு பிரிவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஓலாவில் 200 பேரும், Whirlpool நிறுவனத்தில் 1000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று  அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

Latest News