Pakistan : உலகின் ஆபத்தான நகரங்கள்.. 2ஆம் இடம் பிடித்த பாகிஸ்தான்.. முதல் இடம் யாருக்கு?
Un safest country | சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தான் 2வது இடம் பிடித்துள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் 100-க்கு 93.12 மதிப்பெண்கள் பெற்று சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 2வது இடது பிடித்துள்ளது.
ஆபத்தான நகரம் : சுற்றுலா குறித்த ஆசை மக்கள் மத்தியில் அதிகமாக வளர தொடங்கியுள்ளது. பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருந்துவிடாமல் வாழ்க்கையில் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் வேண்டும் என்று பெரும்பாளான மக்கள் விரும்புகின்றனர். அத்தகைய மனநிலையை கொண்ட பெரும்பாலான மக்கள் உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். சுற்றுலா குறித்த பார்வை விரிவடைந்துள்ள நிலையில், உலக நாடுகளும் சுற்றுலாவுக்கு ஏற்றவையாக தங்கள் நாடுகளை மாற்றி வருகின்றனர். சுற்றுலா செல்வது எப்பவளவு சுவாரஸ்யமான ஒன்றோ அதே அளவுக்கு அதில் ஆபத்துகளும் நிறைந்துள்ளன. அந்த வகையில் சுற்றுலா செல்வதற்கு ஆபத்தான 3 நகரங்கள் குறித்த பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
ஆபத்தான நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்த பாகிஸ்தான்
சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தான் 2வது இடம் பிடித்துள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் 100-க்கு 93.12 மதிப்பெண்கள் பெற்று சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 2வது இடம் பிடித்துள்ளது. ஃபோர்ப்ஸ் அறிக்கையின் இந்த தகவலின்படி, வெனின்சுலாவில் உள்ள கராகஸ் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ள நிலையில், 100-க்கு 91.67 புள்ளிகள் பெற்றும் மியான்மரின் யன்கோன் நகரம் 3வது இடத்தில் உள்ளது.
மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரமாக மாறும் கராச்சி
குற்ற சம்பவங்கள், வன்முறைகள், தீவிரவாத தாக்குதல்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த ஆராய்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மாநில அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, உலகின் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் கராச்சி 3வது இடத்தில் உள்ளது. அதுமட்டுமன்றி பாதுகாப்பற்ற கட்டமைப்பிற்காக கராச்சி 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 60 சர்வதேச நகரங்களுடன் ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : Shocking News : விவாகரத்துக்கு விண்ணப்பித்த பெண்.. கோடாலியால் கால்களை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!
தொடர்ந்து மக்கள் வாழ தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் இடம்பெறும் கராச்சி
மக்கள் வாழ தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் தொடர்ச்சியாக கராச்சியின் பெயர் இடம் பெற்றுக்கொண்டே வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையிலும், பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் கராச்சி இடம் பெற்றிருந்தது. உலகிலே வாழ தகுதியற்ற 5 நகரங்களின் பட்டியலில் கராச்சியும் உள்ளது. பாகிஸ்தானின், கராச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்? முழு விவரம் இதோ!