Pakistan: பாகிஸ்தானில் பயணிகள் வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல்.. 40 பேர் உயிரிழப்பு..

லோயர் குர்ரம் பயங்கரவாதத் தாக்குதலை நேரில் கண்டதை சிலர் அவர்கள் கண்ட காட்சிகளை முன்வந்துள்ளனர். அதில், மக்கள் அதிகம் கூடும் இடத்தில் வாகனத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மக்களை கண்டு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், மக்கள் எதையும் புரிந்துக்கொள்ளும் முன்னரே சடலங்கள் குவியத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

Pakistan: பாகிஸ்தானில் பயணிகள் வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல்.. 40 பேர் உயிரிழப்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

21 Nov 2024 18:50 PM

பாகிஸ்தானின் லோயர் குர்ரம் என்ற இடத்தில் பயணிகள் நிரம்பிய வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தனர். பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 40 பேர் உயிரிழந்தனர். 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் பல பெண்களுடன், ஒரு போலீஸ் அதிகாரியும் உயிரிழந்துள்ளார். பரசினாரில் இருந்து பெஷாவர் நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த 8 பேர் மண்டோரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதல் மிகவும் வருத்தமளிக்கிறது என்றும், உயிர், சேதம் அடைந்துள்ளதால் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம் என்றும் தெரிவித்துளார். மேலும் பயங்கரவாதிகள் கோழைத்தனமான செயலை செய்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியவர்களை அரசாங்கம் சும்மா விடாது என குறிப்பிட்டுள்ளார்.


லோயர் குர்ரம் பயங்கரவாதத் தாக்குதலை நேரில் கண்டதை சிலர் அவர்கள் கண்ட காட்சிகளை முன்வந்துள்ளனர். அதில், மக்கள் அதிகம் கூடும் இடத்தில் வாகனத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மக்களை கண்டு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், மக்கள் எதையும் புரிந்துக்கொள்ளும் முன்னரே சடலங்கள் குவியத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்.. 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு..

ஷியா முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா?

காரில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் ஷியா முஸ்லிம்கள் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதல் நடந்த குர்ரம் மாவட்டத்தில், பெரும்பான்மையான சன்னி மற்றும் சிறுபான்மை ஷியா முஸ்லிம்களுக்கு இடையே சமீப காலமாக பல மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கைபர் பக்துன்க்வாவின் தலைநகரான பெஷாவருக்கு வாகனங்கள் மூலம் பயணிகளை ஏற்றிக் கொண்டு போகும் வழியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அதானி பங்குகள் 20 சதவீதம் வரை வீழ்ச்சி: பின்னணி என்ன?

குர்ரம் தீவிரவாத தாக்குதலுக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார். அப்பாவி பயணிகளை தாக்குவது மிகவும் கோழைத்தனமானது மற்றும் மனிதாபிமானமற்ற செயல் என்றும், அப்பாவிகளைத் தாக்குபவர்கள் தண்டிக்கப்படுவார்கள், உயிரிழந்த குடும்பங்களுக்கு எங்கள் அனுதாபங்கள் என்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆசிப் அலி சர்தாரி அறிவுறுத்தியுள்ளார்.


பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரியும் பயணிகள் வாகனங்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “ குர்ரம் மாவட்டத்தில் அப்பாவி பொதுமக்களை குறிவைப்பது மிகவும் கோழைத்தனமானது மற்றும் கொடூரமானது. தாக்குதல் நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது அரசின் முதல் பொறுப்பு” என குறிப்பிட்டுள்ளார்.

 

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?