பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த போராட்டம்… 100 பேர் காயம்..என்ன நடக்கிறது?
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்:
இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீரின் ஒரு பகுதியைக் கடந்த 1947ல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி ஆக்கிரமித்தது. இந்த பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்காமல் தனது கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் வைத்துள்ளது. இப்போது இந்த பகுதியில் தான் போராட்டம் வெடித்துள்ளது. கோதுமை மாவு விலை உயர்வு, அதிக மின் கட்டணம் ஆகியவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காவல் அதிகாரி ஒருவர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டார் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை அதிகாரிகள்.
100 பேர் காயம்:
சென்சா பரோயான் பகுதியில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் காவல்துறையைச் சேர்ந்த 19 பேர், ரெஹான் பகுதியில் நடைபெற்ற மோதலில் காவல்துறையைச் சேர்ந்த 59 பேர் என மொத்தம் 78 பேர் காயம் அடைந்தனர். டோலியா ஜட்டான் பகுதியில் காவல்துறை அதிகாரிகள் சிலர் காயம் அடைந்தனர். இந்த மோதலின்போது 29 போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர்.
Also Read : காலநிலை மாற்றத்தின் உச்சம்! வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலி.. ஆப்கானிஸ்தானில் சோகம்!
போராட்டம் காரணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் அதிபர் மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காணரம் என்ன?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீர்மின் உற்பத்திச் செல்வுக்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும், மானிய விலையில் கோதுமை மாவு விற்பனை செய்யப்பட வேண்டும், மேல்தட்டு வர்க்கத்துக்கு அளிக்கப்படும் தனிச் சலுகைகளை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஜேஏஏசி) சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சர்வதேச அமைப்புகள் எவ்வளவு நிதி கொடுத்தும் இன்னும் முழுமையாக சீராகவில்லை. இதனால், அங்கு விலைவாசி உயர்த்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read : ”அனுமதியின்றி என்னை பெத்தது தப்பு” பெற்றோர் மீது பெண் வழக்கு.. குழம்பிய நெட்டிசன்கள்!