Pakistan Bomb Blast: பாகிஸ்தான் -குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு.. 20 பேர் உயிரிழந்த சோகம்..
பாகிஸ்தானில் குண்டுவெடிப்புச் செய்திகள் சமீப காலமாக சரலமாகி வருகிறது. இங்கு தினமும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் இதேபோன்ற குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. பாகிஸ்தானின் அமைதியான வடக்கு வஜிரிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். வெடிகுண்டு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குவெட்டாவில் இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்ததாக கூறப்படுகிறது. ஒரு குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டாவது குண்டுவெடிப்பில் சுமார் 15 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு:
🚨#BREAKING: A devastating bomb blast at Quetta Railway Station in Balochistan claims 21 lives, leaving over 30 injured. Baloch Liberation Army has taken responsibility, targeting a Pakistani Army unit aboard the Jaffer Express. Casualties feared to rise .#Pakistan#QuettaRailway pic.twitter.com/rsANRNMePM
— Jamal Amin (@JamalibnAmin) November 9, 2024
இந்த குண்டுவெடிப்பை யார் செய்தது, எதற்காக வெடிகுண்டு வெடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை, இந்த விபத்து குறித்து எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குவெட்டா ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நடைமேடைக்கு வருவதற்கு முன் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் அந்த ரயில் நடைமேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் குண்டு வெடிப்பு நடந்ததால் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பை தொடர்ந்து குவெட்டா ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த நேரில் பார்த்தவர்கள், இது பயங்கரவாத செயல்பாடாக இருக்கும் என தெரிவித்தனர். ஜாபர் எக்ஸ்பிரஸ் பிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த போது, பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பாகிஸ்தானின் வடமேற்கில் அதிகரித்து வரும் தீவிரவாத வன்முறை அலை மற்றும் நாட்டின் தெற்குப் பகுதிகளில் பிரிவினைவாத கிளர்ச்சி அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானில் தொடரும் குண்டு வெடிப்பு சம்பவங்கள்:
At least 21 killed, 30 injured in blast near Quetta railway station in Pakistan*
Islamabad — At least 21 people were killed and 30 others were injured in a bomb explosion near Quetta’s railway station marking the latest incident of unrest in Balochistan.
Preliminary reports… pic.twitter.com/dlDDtXiI0O— Tariq Bhat (@TariqBhatANN) November 9, 2024
பாகிஸ்தானில் குண்டுவெடிப்புச் செய்திகள் சமீப காலமாக சரலமாகி வருகிறது. இங்கு தினமும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் இதேபோன்ற குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. பாகிஸ்தானின் அமைதியான வடக்கு வஜிரிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இது தவிர, கைபர் பக்துன்க்வாவில் உள்ள பள்ளி அருகே குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.
Also Read: டிரம்ப் வெற்றி எதிரொலி.. அதிரடியாக உயர்ந்த எலான் மஸ்கின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
அதே நேரத்தில், இதற்கு சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள பள்ளி அருகே குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில், ஐந்து பள்ளி மாணவர்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 22 பேர் காயமடைந்தனர். பைக்கில் ஐஇடி வெடிகுண்டு வைத்து குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குவெட்டாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.