பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு.. குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு..
மஸ்துங் குண்டுவெடிப்புக்கு பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “தியாகிகளான போலீஸ்காரர்கள் மற்றும் அப்பாவி குழந்தைகளின் குடும்பங்களுக்கு இரங்கல், பயங்கரவாதிகள் இப்போது ஏழை தொழிலாளர்கள் மற்றும் அப்பாவி குழந்தைகளை குறிவைத்துள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது, பயங்கரவாதிகள் இப்போது அப்பாவி குழந்தைகளை மென்மையான இலக்குகளாக குறிவைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. இதுவரை கிடைத்த தகவலின்படி, ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு போலீஸ்காரர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். காலை 8:35 மணியளவில் மஸ்துங் சிவில் மருத்துவமனை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கலாட் பிரிவு ஆணையர் நயீம் பசாய் தெரிவித்தார். போலீஸ் மொபைல் அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த இஐடி (இம்ப்ரோவைஸ்டு எக்ஸ்ப்ளோசிவ் டிவைஸ்) வெடிக்கச் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நவாப் கௌஸ் பக்ஷ் ரைசானி மெமோரியல் மருத்துவமனை மற்றும் மஸ்துங் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவை அடங்கும், அவர்களில் 11 பேர் குவெட்டா ட்ராமா மையத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் ஆவர்.
#BREAKING 🚨🚨:
Death toll from #Mastung blast rises to 7, including 5 innocent schoolchildren, 1 police man & 1 civilian. 22 injured, 13 critically shifted to #Quetta. Explosion caused by remote-control bomb attached to a motorcycle.
#Pakistan #Terrorism #Condolences pic.twitter.com/1K5SMvPqOG— Ayaz_Baloch🌐 (@Zunnorain_) November 1, 2024
குவெட்டா ட்ராமா சென்டருக்கு மாற்றப்பட்டவர்களில் ஐந்து வயது சிறுமியும் ஒரு சிறுவனும் அடங்குவர். குவெட்டா ட்ராமா சென்டர் நிர்வாக இயக்குனர் அர்பாப் கம்ரான் வெளியிட்டுள்ள நோயாளிகளின் பட்டியலின்படி, 11 பேரில் 5 பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் மருத்துவமனைகளில் நிலைமையை உதவி கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் கண்காணித்து வருவதாக கமிஷனர் நயீம் பசாய் தெரிவித்தார். இது போன்ற அசம்பாவிதம் மீண்டும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, காயமடைந்தவர்களில் 4 காவலர்களும் இடம்பெற்றுள்ளதாக மஸ்துங் மாவட்ட காவல்துறை அதிகாரி மியான்டத் உம்ரானி தெரிவித்திருந்தார். இறந்த குழந்தைகளின் வயது ஐந்து முதல் 10 வயது வரை இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிபிஓவின் கூற்றுப்படி, வெடிப்பு காரணமாக ஒரு போலீஸ் வேன் மற்றும் பல ஆட்டோ ரிக்ஷாக்கள் சேதமடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் நடந்தது தொடர்பாக இணையத்தில் காட்சிகள் பகிரப்பட்டு வருகிறது. அதில், குண்டுவெடிப்பு காரணமாக போலீஸ் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததது போலும், அதற்கு அருகில் மக்கள் கூட்டம் கூடியிருப்பது போலும் வெளியாகியுள்ளது.
وزیر اعلیٰ بلوچستان میر سرفراز بگٹی کی مستونگ میں دھماکے کی مذمت
شہید پولیس اہلکار اور معصوم بچوں کے ورثاء سے اظہار افسوس، دہشت گردوں نے غریب مزدوروں کے ساتھ اب معصوم بچوں کو نشانہ بنایا، انسانیت سوز واقعہ قابل مذمت ہے ، دہشت گردوں نے سافٹ ٹارگٹ میں اب معصوم بچوں کو نشانہ…
— Chief Minister’s Office Balochistan (@CMOBalochistan) November 1, 2024
மஸ்துங் குண்டுவெடிப்புக்கு பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “தியாகிகளான போலீஸ்காரர்கள் மற்றும் அப்பாவி குழந்தைகளின் குடும்பங்களுக்கு இரங்கல், பயங்கரவாதிகள் இப்போது ஏழை தொழிலாளர்கள் மற்றும் அப்பாவி குழந்தைகளை குறிவைத்துள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது, பயங்கரவாதிகள் இப்போது அப்பாவி குழந்தைகளை மென்மையான இலக்குகளாக குறிவைத்துள்ளனர். பொதுமக்கள் மத்தியில், உள்ளூர் மக்களும் பயங்கரவாதிகள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும், பயங்கரவாத அரக்கர்களை ஒன்றாக மட்டுமே எதிர்த்துப் போராட முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.