பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்.. 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு..
தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை போலீஸ் சாவடி மீது மோதி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.குண்டுவெடிப்பில் காவல் நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு இருந்த 10 வீரர்கள் மற்றும் இரண்டு எல்லைப்புற காவலர்கள் உட்பட மொத்தம் 12 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பதற்றமான மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. தற்கொலைப்படை தாக்குதலில் 12 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்த பாகிஸ்தான் ராணுவம், இன்று தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை போலீஸ் சாவடி மீது மோதி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.குண்டுவெடிப்பில் காவல் நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு இருந்த 10 வீரர்கள் மற்றும் இரண்டு எல்லைப்புற காவலர்கள் உட்பட மொத்தம் 12 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
மேலும் இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
6 பயங்கரவாதிகள் உயிரிழப்பு:
பாகிஸ்தான் ஜானி கேலிப் பாகிஸ்தான் இராணுவம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல்
17 பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் பலி pic.twitter.com/qjj58whhBh— E Chidambaram. (@JaiRam92739628) November 20, 2024
இச்சம்பவம் குறித்து மேலும் தகவல் அளித்துள்ள ராணுவம், போலீஸ் சாவடியில் வெடிகுண்டு வெடித்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. மாகாணத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, அந்த பகுதி முழுவதும் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவம் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க: உக்ரைன் போரில் ரஷ்யா அனு ஆயுதங்களை பயன்படுத்த திட்டமா? புதின் எடுத்த அதிரடி முடிவு..
அப்பகுதி முழுவதும் ராணுவம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு நடந்த மற்றொரு சம்பவத்தில், பன்னு மாவட்டத்தின் மாலிகேல் பகுதியில் உள்ள கூட்டுச் சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர், ஆனால் பாதுகாப்புப் படையினரால் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் பதற்றமான மாகாணங்களான கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய பகுதிகளில் சமீப காலமாக பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சில அறிக்கைகளின்படி, இந்த சம்பவங்கள் 90 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சமாளிக்க பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் அரசின் பிரதிநிதிகள் தவிர, ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிரான விரிவான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மணமகன் ஊர்வலத்தில் திடீரென பெய்த பணமழை.. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
தொடரும் தாக்குதல்கள்:
10 நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர். பலரும் காயமடைந்தனர். ஜாபர் எக்ஸ்பிரஸ் பிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த போது, பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பாகிஸ்தானின் வடமேற்கில் அதிகரித்து வரும் தீவிரவாத வன்முறை அலை மற்றும் நாட்டின் தெற்குப் பகுதிகளில் பிரிவினைவாத கிளர்ச்சி அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதேபோல் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள பள்ளி அருகே குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில், ஐந்து பள்ளி மாணவர்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.