5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

News9 Global Summit: உறவின் புதிய அத்தியாயம்.. ஜெர்மனியை தொழில் தொடங்க பிரதமர் மோடி அழைப்பு!

இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே 34 பில்லியன் டாலர் வர்த்தகம் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பல ஆண்டுகளாக வலுவாக வளர்ந்து வருகிறது. இன்று இந்தியா வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியா அனைத்து துறைகளிலும் புதிய கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது என பிரதமர் மோடி நியூஸ்9 உலகளாவிய உச்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

News9 Global Summit: உறவின் புதிய அத்தியாயம்.. ஜெர்மனியை தொழில் தொடங்க பிரதமர் மோடி அழைப்பு!
உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 22 Nov 2024 22:13 PM

நியூஸ்9 உலகளாவிய உச்சி மாநாடு ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற ஸ்டட்கார்ட் மைதானத்தில் நவம்பர் 21-23 ஆகிய 3 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் 2ஆம் நாளான இன்று மாநாட்டு அமர்வில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக வந்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்திய-ஜெர்மன் உறவில் இன்று புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இவ்வளவு பெரிய திட்டத்தை முன்னெடுத்த டிவி9க்கு  வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஜெர்மனியைப் பற்றி அறிய இது ஒரு புதிய வாய்ப்பாக அமையும் என  மோடியும் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “ஜெர்மனியையும், ஜெர்மன் மக்களையும் இணைக்கும் வகையில் இந்திய ஊடகக் குழு செயல்படுவது எனக்குப் பெருமையாக உள்ளது. ஜெர்மனி இந்தியாவின் மிக முக்கியமான கூட்டாளிகளில் ஒன்றாகும். இன்று உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் இந்தியாவுடன் கூட்டு சேர விரும்புகிறது” என கூறினார்.

மேலும் இந்தியாவின் மிக முக்கியமான கூட்டாளிகளில் ஜெர்மனியும் ஒன்று. இன்று இந்திய-ஜெர்மனி கூட்டாண்மை 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஜெர்மனி இந்தியாவை ஒரு சிறப்பு நாடாகக் கருதுகிறது. ‘ஃபோகஸ் ஆன் இந்தியா’ ஆவணத்தை ஜெர்மனி வெளியிட்டது. தற்போது ஜெர்மனியில் சுமார் 3 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். மேலும், 1800க்கும் மேற்பட்ட ஜெர்மன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் மேற்கொண்டு வருகிறது. வரும் காலத்தில் இந்தியா மற்றும் ஜெர்மனி இடையேயான வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். ஜெர்மனியின் ‘ஃபோகஸ் ஆன் இந்தியா’ ஆவணம் இதன் அடையாளமாகும்’ என தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியா

இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே 34 பில்லியன் டாலர் வர்த்தகம் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பல ஆண்டுகளாக வலுவாக வளர்ந்து வருகிறது. இன்று இந்தியா வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியா அனைத்து துறைகளிலும் புதிய கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான வியாபாரத்தை எளிதாக்கியுள்ளோம். அனைத்து வங்கிகளும் திறமையாக செயல்படுகின்றன. வளமான இந்தியாவுக்காக ஒரு பெரிய கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது இந்தியா உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாறி வருகிறது. நமது உற்பத்தித் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருகிறது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல்களில் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான நல்லுறவு குறித்து இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விளக்கமளித்தார்.

இதற்கிடையில், இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே வர்த்தகம், இருதரப்பு, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன், TV9 குழுமத்தின் நியூஸ் 9 அனுசரணையில், இந்தியா-ஜெர்மனி உலகளாவிய உச்சி மாநாடு ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நியூஸ் 9 அமைப்பின் கீழ் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற இந்தியா-ஜெர்மனி உச்சி மாநாட்டின் தொடர்ச்சியாக, ஜெர்மனியிலும் மாநாடு நடைபெறுகிறது.

Latest News