5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Quad Summit 2024: அமெரிக்காவுக்கு பறக்கும் மோடி.. அஜெண்டா இதுதான்.. அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் இரு நாட்டு உறவு?

PM Modi America Visit: பிரதமர் மோடி மூன்று நாட்கள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டார். இன்று முதல் 23ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்க செல்கிறார். ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-ஹமாஸ் என  பல போர்களுக்கு இடையே பிரதமர் மோடி அமெரிக்கா செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Quad Summit 2024: அமெரிக்காவுக்கு பறக்கும் மோடி.. அஜெண்டா இதுதான்.. அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் இரு நாட்டு உறவு?
பிரதமர் மோடி (Photo Credit: PTI)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 21 Sep 2024 16:32 PM

பிரதமர் மோடி மூன்று நாட்கள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டார். இன்று முதல் 23ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்க செல்கிறார். அமெரிக்காவில் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருக்கிறார்.  இஸ்ரேலுக்கும் ஹில்புல்லா அமைப்புக்கு இடையே நடக்கும் போர் சூழல், ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-ஹமாஸ் என  பல போர்களுக்கு இடையே பிரதமர் மோடி அமெரிக்கா செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு பறக்கும் மோடி

அமெரிக்காவுக்கு தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி இன்று இரவு 7.30 மணிக்கு சென்றடைவார். விமான நிலையித்தில் அதிபர் ஜோ பைடனின் சொந்த ஊரான டெலாவரில் உள்ள வில்மிங்டனுக்கு செல்கிறார். அங்கு இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சு வார்த்தையை நடத்த உள்ளனர். இருநாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பிரதமர் மோடியும், அதிபர் ஜோ பைடனும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

Also Read: மாதவிடாய் விடுமுறை.. பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை.. அரசு எடுத்த முடிவு!

மேலும், உக்ரைன் பயணம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு, இஸ்ரேல் போர், காசா விவாகரம் தொடர்பாக பிரதமர் உலக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, குவாட் கூட்டமைப்பின் உச்ச மாநாட்டில் பங்கேற்க உள்ளார். குவாட் கூட்டமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகள் கலந்து கொள்கின்றன.

அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டனில் குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மோடி பங்கேற்பார். தனது பயணத்தின் 2வது நாளில், நியூயார்க்கில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார் மற்றும் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

3 நாள் திட்டம் இதுதான்:

இதில், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் பயோடெக்னாலஜி மற்றும் செமிகண்டக்டர்களின் அதிநவீன பகுதிகளில் ஒத்துழைப்பு பற்றி முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகளுடன்  மோடி ஆலோசனை நடத்துவார். தனது பயணத்தின் மூன்றாவது நாளான செப்டம்பர் 23ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பிரதமர் மோடி உரையாற்றுவார்.

அப்போது தற்போதைய உலகளாவிய மோதல் பற்றி எடுத்துரைத்து அனைவரிடம் உள்ளடக்கிய மற்றும் சமமான நிலையான வளர்ச்சிக்கான அழைப்பை பிரதமர் மோடி விடுப்பார். உச்சிமாநாட்டின் கருப்பொருள் ‘ஒரு சிறந்த நாளைக்கான பலதரப்பு தீர்வுகள்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஐ.நா உச்சி மாநாட்டையொட்டி, மேலும் சில உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது. இதனை அடுத்து, அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டெனால்டு டிரம்ப்பை பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் உறுதியாகவில்லை.

இந்தியா – அமெரிக்கா உறவு:

பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணம் குறித்து பேசுகையில், “குவாட் உச்சி மாநாட்டில் எனது சகாக்களான ஜனாதிபதி பிடன், பிரதமர் அல்பானீஸ் மற்றும் பிரதமர் கிஷிடா ஆகியோருடன் இணைந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். அமைதிக்காக பணியாற்றும் ஒரே எண்ணம் கொண்ட நாடுகளின் முக்கிய குழுவில் இந்தியா உள்ளது.  இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக பணியாற்றுவதற்கு ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் முக்கிய கூட்டமைப்பாக குவாட் உருவெடுத்துள்ளது.

அதிபர் பைடனுடனான இருதரப்பு பேச்சுவார்த்தை, இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த புதிய பாதைகளை அடையாளம் காண இரு தலைவர்களுக்கும் உதவியாக இருக்கும். உலக சமூகம் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான பாதையை பட்டியலிட எதிர்கால உச்சிமாநாடு ஒரு வாய்ப்பாகும். மனிதகுலத்தின் ஆறில் ஒரு பகுதியினரின் கருத்துகளை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

Also Read: “பெருமாள் பெயரில் அரசியல் நடக்குது” திருப்பதி லட்டு குறித்து ஜெகன் மோகன் காட்டம்!

அமைதியான மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் உலகின் மிக உயர்ந்த ஒன்றாகும். அமெரிக்க வர்த்தகத் தலைவர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்துடனும், முக்கிய அமெரிக்க வணிகத் தலைவர்களுடனும் ஈடுபட ஆவலுடன் இருப்பதாக” பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Latest News