PM Modi Russia Visit: “மூன்று மடங்கு அதிகமாக உழைப்பேன்” ரஷ்யாவில் பேசிய பிரதமர் மோடி! - Tamil News | | TV9 Tamil

PM Modi Russia Visit: “மூன்று மடங்கு அதிகமாக உழைப்பேன்” ரஷ்யாவில் பேசிய பிரதமர் மோடி!

ரஷ்யாவுக்கு இரண்டு நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ரஷ்யாவின் விளாடிவோஸ் நகரில் கடந்த 2019ல் நடந்த பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்றார். இதையடுத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பையேற்று, அந்நாட்டில் நடைபெறும் இருநாட்டு உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ளார் பிரதமர் மோடி.

PM Modi Russia Visit: மூன்று மடங்கு அதிகமாக உழைப்பேன் ரஷ்யாவில் பேசிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

Updated On: 

09 Jul 2024 15:07 PM

ரஷ்யாவில் பிரதமர் மோடி: ரஷ்யாவுக்கு இரண்டு நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ரஷ்யாவின் விளாடிவோஸ் நகரில் கடந்த 2019ல் நடந்த பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்றார். இதையடுத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பையேற்று, அந்நாட்டில் நடைபெறும் இருநாட்டு உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ளார் பிரதமர் மோடி. ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்துக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, விளாடிமிர் புதின் நோவோ-ஓகரேவோவில் உள்ள அவரது பங்களாவில் தனிப்பட்ட முறையில் மோடிக்கு இரவு விருந்து அளித்தார். இதனை தொடர்ந்து, இன்று ரஷ்யாவில் வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியா-ரஷ்யா நட்பு எப்போதும் சிறப்பாகவே இருந்து வருகிறது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மூன்றாவது முறையாக ஒரு கட்சி ஆட்சி அமைப்பது மிகப்பெரிய விஷயம்.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு புலம்பெயர்ந்த இந்தியவர்களுடன் உரையாடுகிறேன். 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடத்தப்பட்டன. அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மற்றும் இந்த நான்கு மாநிலங்களில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் ஒடிசாவில் மாபெரும் வெற்றி என்டிஏ கூட்டணி பதவி செய்தது. அதனால் தான் நானும் இன்று ஒடியா ஆடை அணிந்து உங்கள் மத்தியில் வந்துள்ளேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இந்திய- ரஷ்யா உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது.

Also Read: 3 நாள் வெளிநாட்டு பயணம்.. ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை.. முழு விவரம்..

“மூன்று மடங்கு அதிகமாக உழைப்பேன்”

பல்வேறு தருணங்களில் அது சோதனைக்கு உள்ளானது. அப்போது எல்லாம் இந்த நட்பின் பிணைப்பு மேலும் கூடியுள்ளது. எனது அன்பான நண்பரான அதிபர் புதினை பாராட்டுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் இருவரும் 17 முறை சந்தித்து உள்ளோம். நான் ஆறாவது முறையாக ரஷ்யா வந்துள்ளேன். நம் மாணவர்கள் இங்கு சிக்கி தவித்தபோது ரஷ்யா உதவியது. அந்த வகையில் ரஷ்யாவுக்கும், புதினுக்கும் எனது நன்றி.

2014ஆம் ஆண்டுக்கு முன், நாங்கள் விரக்தியின் ஆழத்தில் மூழ்கியிருந்தோம். இன்று, நாடு தன்னம்பிக்கையால் நிறைந்துள்ளது, இது இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றியை நீங்கள் அனைவரும் கொண்டாடியிருக்க வேண்டும். நீங்கள் செய்தீர்களா? அல்லது இல்லையா? உலகக் கோப்பை வெற்றியை நோக்கி ஒரு உண்மையான கதையும் பாதையும் உள்ளது .

இன்றைய இளைஞர்களும் இந்திய இளைஞர்களும் கடைசிப் பந்து வரை கைவிடாதீர்கள். மூன்றாவது முறையாக நான் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைகிறது. நான் மூன்று மடங்கு வலிமையுடன், மூன்று மடங்கு அதிக வேகத்தில் பணியாற்றுவேன் என்று சபதம் எடுக்கிறேன். இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவது இலக்கு. இந்த முறை ஏழைகளுக்கு மூன்றாவது கட்டமாக 3 கோடி வீடுகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

Also Read: 2.5 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு பிஎஃப் செலுத்தாத ஸ்பைஸ்ஜெட்.. RTI மூலம் வெளியான உண்மை!

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!