Iran President: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர்.. தேடுதல் வேட்டை தீவிரம்!
Helicopter Crash: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஈரான் அதிபரை மீட்கும் தேடுதல் பணிகள் தீவிரமடைந்துள்ளது. அஜர்பைஜான் சென்று திரும்பிய வழியில் விபத்து நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து: மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நாடாக ஈரான் விளங்குகிறது. இஸ்லாமிய நாடான ஈரான் நாட்டின் அதிபராக இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜர்பைஜான் நாட்டுக்குச் சென்ற ரைசி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்ததாக ஈரான் அந்நாடு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து சுமார் 600 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஜோல்ஃபா என்ற நகரத்தின் அருகே இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஈரான் அதிபர் ரைசி அல்லது அவருடன் சென்ற அதிகாரிகளுக்கு என்ன ஆனது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. விபத்து நடந்ததாக கூறப்படும் பகுதியில் கனமழையும், பனிமூட்டமும் நிலவுவதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடைபெற்ற ஹெலிகாப்டரில் ஈரான் அதிபர் இப்ராஹின் ரைசி தவிர்த்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைன் அமீரப்துல்லாஹியான், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மத்தி மற்றும் சில மூத்த அதிகாரிகள் ஆகியோரும் ஹெலிகாப்டரில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: நாளை 5ஆம் கட்ட தேர்தல்.. எத்தனை தொகுதிகள்? ஸ்டார் வேட்பாளர்கள் யார்?
இஸ்ரேல் சதிச்செயல்
ஈரான் நாட்டை சேர்ந்த மீட்புப் படையினர் விபத்து நடந்த பகுதியை அடைய முயற்சிப்பதாகவும், மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஈரான் உள்துறை அமைச்சர் அஹமத் வாஹிதி தெரிவித்துள்ளார். அதிபர் ரைசியுடன் சென்ற ஹெலிகாப்டர் கான்வாயில் மொத்தம் மூன்று ஹெலிகாப்டர்கள் இருந்ததாகவும், அதில் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றனர். இன்னொருபுறம் இந்த விபத்துக்கு பின்னால் இஸ்ரேலின் சதிச் செயல் இருக்கலாம் என்கிற ரீதியில் ஒரு விவாதமும் சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் செய்திகள் உலா வருகின்றன.
இன்ஸ்டகிராமில் பதிவு
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்திக்குமாறு அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுளது. மோசமான வானிலையால் விபத்து நேர்ந்த பகுதியை அடைய ஈரான் மீட்புப் படையினர் கடும் சவாலை எதிர்கொண்டு வருவதாக தகவல் கூறுகின்றனர். மேலும், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் கண்டுபிடிக்க உதவும் மீட்புப் பணிக்கு ஐரோப்பிய ஒன்றியம் மேப்பிங் சேவைகளை வழங்கும் செயற்கைக்கோளை ஐரோப்பிய ஒன்றியம் செயல்படுத்தியுள்ளது.
விபத்து நடைபெற்ற இடத்தில் கடுமையான குளிர், மழை காரணமாக வான் வழியாக தேடும் பணி பாதிப்பட்ட்டுள்ளதாகவும், விபத்துக்குள்ளான இடத்தை நோக்கி மீட்பு குழுவினர் கால்நடையாக முன்னேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்
Also Read: “ஆம் ஆத்மியை அழிக்க சதி திட்டம்” கெஜ்ரிவால் பரபர குற்றச்சாட்டு!
பிரதமர் மோடி கவலை
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்து செய்தியை அறிந்து மிகுந்த கவலை அடைந்துள்ளேன் என்று இந்திய பிரதமர் மோடி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் ஈரானிய மக்களுடன் நாங்கள் துணை நிற்பதாக, பிரதமர் மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.