5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Iran Israel War: ” இந்த ஆண்டு வெற்றியின் ஆண்டாக அமையும்” – யூத புத்தாண்டில் வாழ்த்து கூறிய பிரதமர் நெதன்யாகு..

இப்படி போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 74.40 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் நடுவே கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்தது.

Iran Israel War: ” இந்த ஆண்டு வெற்றியின் ஆண்டாக அமையும்” – யூத புத்தாண்டில் வாழ்த்து கூறிய பிரதமர் நெதன்யாகு..
பிரதமர் நெதன்யாகு
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Oct 2024 22:10 PM

யூதர்களின் புத்தாண்டான ‘ரோஷ் ஹஷானா’ அன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் ஒரு பெரிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இது முழுமையான வெற்றி ஆண்டாக அமையும் என நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். ‘ரோஷ் ஹஷனா’ நிகழ்ச்சியில், அனைத்து உலகத் தலைவர்களும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவருக்கு இந்திய பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் இஸ்ரேலுக்கு அமைதியை விரைவில் வரும் என உறுதியளித்துள்ளார்.


யூத புத்தாண்டுக்கு ஒரு நாள் முன்னதாக, ஈரான் இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்தியது. ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இரவு நடந்த பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில், ஈரான் பெரிய தவறை செய்துவிட்டதாக நெதன்யாகு கூறினார். அதன் விளைவுகளை அவன் அனுபவிக்க வேண்டும். ஏவுகணை தாக்குதல் தோல்வியில் முடிந்தது. ஈரான் விரைவில் ஒரு வேதனையான பாடத்தைக் கற்றுக்கொள்ளும். காசா, லெபனான் மற்றும் பிற இடங்களில் எதிரிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். எங்களைத் தாக்குபவர்களுக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம் என்று பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


செவ்வாயன்று ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசியது. வரும் வழியில் பல ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக ஈரானில் கொண்டாடப்பட்டது. அதேசமயம், தனது ஏவுகணைகளில் பெரும்பாலானவை இலக்கை நோக்கி வீழ்ந்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக ஏவப்பட்ட ஏவுகணைகளில் 90 சதவீதம் இலக்கை நோக்கி வீழ்ந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

இப்படி போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 74.40 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் நடுவே கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்தது.


இதற்கிடையில், `லெபனானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளது. ஐடிஃப் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கேப்டன் எய்டன் யிட்சாக் லெபனான் எல்லைக்குள் இன்று நடந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளது.

Also Read: இன்னும் 3 நாட்கள் மட்டும் தான்.. மீண்டும் விலையேற போகும் ஐபோன் 15.. மிஸ் பண்ணிடாதீங்க!

மேலும் ஈரான் தரப்பில் இந்த போருக்கு சில அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளே காரணம் என்றும், இங்கு அமைதியை நிலைநாட்டுவதாக தவறான வாக்குறுதியை அளித்துள்ளனர். அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும். அப்போது தான் அமைதி காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News