Donald Trump : டொனால்ட் டிரம்பின் வீட்டை காவல் காக்கும் “Robot Dog”.. எலான் மஸ்கின் அன்பு பரிசா?

Robot Dog | அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது டொனால்ட் டிரம்ப் மீது பல முறை கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

Donald Trump : டொனால்ட் டிரம்பின் வீட்டை காவல் காக்கும் Robot Dog.. எலான் மஸ்கின் அன்பு பரிசா?

மாதிரி புகைப்படம்

Published: 

11 Nov 2024 20:34 PM

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 6 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டிரம்பின் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வீட்டை ரோபோட்டிக் அம்சம் கொண்ட நாய் காவல் காத்து வருகிறது. தேர்தலுக்கு முன்பு டிரம்ப் மீது பலமுறை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அவர் பதவியில் உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பல படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விறுவிறுப்பாக நடந்து முடிந்த அதிபர் தேர்தல்

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசின் பதவி காலம் முடிவடையும் தருவாயில் இருந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் அப்போதைய அதிபர் ஜோ பைடனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் பிரச்சாரங்களின் போது அப்போதைய அதிபர் ஜோ பைடன் சந்தித்த கடும் விமர்சனங்கள் மற்றும் சிக்கல்கள் காரணமாக அவர் தேர்தலில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அதிபர் தேர்தலில் இருந்து தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரை முன்மொழிந்தார்.

இதையும் படிங்க : நோ டேட்டிங், நோ உடலுறவு.. போராட்டத்தில் குதித்த அமெரிக்க பெண்கள்.. காரணம் என்ன?

கடும் விமர்சனங்களை சந்தித்த ஜோ பைடன்

அதன்படி, ஜோ பைடனுக்கு பதிலாக ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ்  அறிவிக்கப்பட்டார். ஜோ பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதே, தான் வெற்றி பெற்றுவிட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், அவற்றை எல்லாம் கண்டுக்கொள்ளாத கமலா , தொடர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். அதுமட்டுமன்றி, எதிர் போட்டியாளர் டிரம்ப் உடனும் அவர் நேருக்கு நேர் விவாதம் நடத்தினார். கமலா ஹாரிஸ், டிரம்ப் என இரண்டு போட்டியாளர்களும் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது மட்டுமன்றி, அவர்களுக்கு ஆதரவாக பிரபலங்களும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சுமார் 295 இடங்களில் வெற்றி பெற்று அதிபரானார் டொனால்ட் டிரம்ப்.  இதேபோல, 226 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை தழுவினார் கமலா ஹாரிஸ்.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.. முக்கிய குற்றவாளியான இந்திரஜித் கோசல் கைது..

Robot Dog பாதுகாப்பில் டொனால்ட் டிரம்ப் வீடு

அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது டொனால்ட் டிரம்ப் மீது பல முறை கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது ஒருமுறை, கோல்ஃப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது ஒருமுறை என இரண்டிற்கும் மேற்பட்ட முறை அவர் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் வீட்டை ரோபோ நாய் பாதுகாத்து வருகிறது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டிரம்பின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக எலான் மஸ்க் இந்த ரோபோ நாயை வழங்கியுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

ABC ஜூஸில் இவ்வளவு பிரச்னைகள் உள்ளதா?
பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது சரியானது?
தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ