5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

புதினின் அதிரடி மூவ்! பாதுகாப்பு துறைக்கு புதிய அமைச்சர்.. இதுதான் காரணமா?

ரஷ்யாவில் அதிபராக 5வது முறையாக பொறுப்பேற்ற புதின் திடீரென பாதுகாப்பு துறை அமைச்சரை மாற்றியுள்ளார்.

புதினின் அதிரடி மூவ்! பாதுகாப்பு துறைக்கு புதிய அமைச்சர்.. இதுதான் காரணமா?
ரஷ்ய அதிபர் புதின்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 13 May 2024 11:00 AM

ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மாற்றம்:

உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக ரஷ்யா திகழ்கிறது. அமெரிக்காவுக்கு நிகராக ஒரு நாடு என்றால் அது ரஷ்யா ஆகும். இங்கு ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 71வயதாகும் புதின் 5வது முறையாக மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சரை புதின் மாற்றியுள்ளார். அதாவது, கடந்த 2012ஆம் அண்டு முதல் ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் செர்ஜி ஷோய்கு. இவரை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு, ஆண்ட்ரி பெலோசாவை பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமித்துள்ளார். புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஆண்ட்ரி பெலோசா பெருளாதார வல்லுநரும், ரஷ்யாவின் முன்னாள் துணை பிரதமராகவும் இருந்துள்ளார்.

Also Read : ”அனுமதியின்றி என்னை பெத்தது தப்பு” பெற்றோர் மீது பெண் வழக்கு.. குழம்பிய நெட்டிசன்கள்!

காரணம் என்ன?

புதினின் திடீர் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்டிரி பெஸ்கோவ் கூறுகையில், “1980ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் சோவியத் யூனியன் எப்படி இருந்ததோ, அதேபோன்ற ஒரு சூழலில் ரஷ்யா இருக்கிறது. ரஷ்யாவின் மொத்த செலவில் 7.4 சதவீதம் மட்டுமே பாதுகாப்பு துறைக்கு செல்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த நலன்களுக்கே இத்தகைய தொகைகள் ஒதுக்கப்படுகிறது. அவை சரியாக செலவிடுவதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயம்.

அதனால் தான் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் பொருளாதார பின்னணி கொண்டவராக இருக்க வேண்டும் என்பதை புதின் விரும்பினார். அதனால் தான் பாதுகாப்புத்துறையில் மாற்றம் செய்யப்பட்டது” என்றார். மேலும், செர்ஜி ஷோய்குவை ரஷ்யாவின் சக்திவாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக நியமிக்க புதின் முடிவு எடுத்திருக்கிறார். கடந்த 2022ஆண் ஆண்ட உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து புதின் மேற்கொண்ட மிக முக்கியமான ராணுவத்தின் மறுசீரமைப்பு இதுவாக கருதப்படுகிறது.

Also Read : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த போராட்டம்… 100 பேர் காயம்..என்ன நடக்கிறது?

Latest News