5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video: வட கொரிய அதிபரை காரில் அழைத்துச் சென்ற ரஷ்ய அதிபர் புதின்.. வைரல் வீடியோ..!

Kim Jong Un - Vladimir Putin: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை ரஷ்யா தயாரித்த ஆரஸ் லிமோசின் காரில் அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு நாடுகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கத்தைக் காட்டும் முயற்சியில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதின் ரஷ்யா தயாரித்த ஆரஸ் லிமோசின் காரை பரிசளித்துள்ளார். மாறாக கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபருக்கு ஒரு ஜோடி Pungsan நாய்களை பரிசளித்துள்ளார்.

Watch Video: வட கொரிய அதிபரை காரில் அழைத்துச் சென்ற ரஷ்ய அதிபர் புதின்.. வைரல் வீடியோ..!
கிம் ஜாங் உன் – விளாடிமிர் புதின்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Jun 2024 13:01 PM

விளாடிமர் புதின் – கிம் ஜாங் உன் கார் பயணம்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை ரஷ்யா தயாரித்த ஆரஸ் லிமோசின் காரில் அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு நாடுகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கத்தைக் காட்டும் முயற்சியில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய அரசு தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில், கிரெம்ளின் தலைவர் ரஷ்யாவில் தனது அதிகாரப்பூர்வ ஜனாதிபதி காரான கருப்பு கவச காரில் கிம் ஜாங் உன் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்தார். கார் பூங்கா பகுதி வழியாக செல்லும்போது, ​​இரு தலைவர்களும் தங்கள் பயணம் முழுவதும் ஜாலியாக பேசிக்கொண்டு சிரித்தப்படி சென்றனர். தலைவர்கள் இருவரும் மாறி மாறி காரை ஒட்டிச் சென்றனர்.

Also Read: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி.. அதிர்ச்சியில் ரயில் பயணிகள்..!

இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில், உச்சி மாநாட்டிற்காக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்குச் சென்றிருந்த போது, ரஷ்ய அதிபர் புதினுடன் பரஸ்பர சந்திப்பு நடைபெற்றது. அதன்பின் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின், வடகொரியாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தித்துள்ளார். முறையான சந்திப்புக்குப் பிறகு இரு நாட்டு அதிபர்களும் ரஷ்யா, வடகொரியா இடையிலான விரிவான கூட்டாணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையிலான கலாசாரம், விவசாயம், பொருளாதாரம் மற்றும் சுற்றுலா துறைகளில் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற சூழலில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் காரில் சிரித்தப்படி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. கிம் ஜாங் உன்னிடம் வெளிநாட்டு வாகனங்களின் பெரிய சேகரிப்பு உள்ளது. அவரிடம் மேபாக், மெர்சிடீஸ் என பல சொகுசு கார்கள் உள்ளது. அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதின் ரஷ்யா தயாரித்த ஆரஸ் லிமோசின் காரை பரிசளித்துள்ளார். மாறாக கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபருக்கு ஒரு ஜோடி Pungsan நாய்களை பரிசளித்துள்ளார்.

Also Read: சர்வதேச யோகா தினம்.. ராணுவ வீரர்கள் முதல் மாணவர்கள் வரை யோகா செய்து அசத்தல்..

Latest News