5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Flight Accident: 297 பயணிகள்.. திடீரென தீப்பிடித்த விமானம்.. பரபர சம்பவம்!

Saudi Flight Accident | பாகிஸ்தானில் தரை இறங்க தயாராக இருந்த சவுதி அரேபியா விமானம், சிறு கோளாறால் திடீரென தீ பற்றியது. தகவல் அறிந்த விமானி அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் பயணிகள் மற்றும் விமான குழுவினரை பாதுகாப்பாக மீட்டனர்.

Flight Accident: 297 பயணிகள்.. திடீரென தீப்பிடித்த விமானம்.. பரபர சம்பவம்!
விமான விபத்து
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 11 Jul 2024 19:10 PM

திடீரென தீ பிடித்த விமானம் : தரை இறங்க தயாராக இருந்த சவுதி அரேபியா விமானம் திடீரென தீ பித்த ட்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 297 பயணிகளுடன் தரை இறங்க தயாராக இருந்த சவுதி அரேபியா விமானத்தில் திடீரென தீ பிடித்தது. பாகிஸ்தானின் பேஷ்வர் விமான நிலையத்தில் தரை இறங்க விமானம் தயாராகியது. அப்போது லேண்டிங் கியர் கோளாறு காரணமாக விமானம் தீ பிடித்துள்ளது. பயணிகள் மற்றும் விமான குழுவினர் உடனடியாக விமானத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அதிஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீ விபத்து குறித்து விளக்கம் அளித்த நிர்வாகம்

இந்த விமான விபத்து குறித்து சவுதி விமான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானின் பேஷ்வர் விமான நிலையத்தில், விமானத்தை தரையிறக்க முயற்சித்த போது, டயரில் இருந்து சிறய அளவு புகை வந்தது. ரியாத்தில் இருந்து பேஷ்வர் விமான நிலையத்திற்கு சென்றுக்கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்றதாகவும் சவுதி விமான நிர்வாகம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

விமானத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகள்

விமானத்தில் ஏற்பட்ட பிரச்னை உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு பயணிகள் மற்றும் விமான குழுவினர் பாதுகாப்ப்பாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் கோளாறுக்குள்ளான விமானம் வல்லுநர்களின் உதவியுடன் பழுது பார்க்கப்பட்டு வருவதாகவும் நிர்வாகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விண்வெளியில் சாக்லேட் தினத்தை கொண்டாடிய ஆராய்ச்சியாளர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இது குறித்து விபத்துக்குள்ளான புகைப்படங்களை பதிவிட்டு குலோபல் டிஃபன்ஸ் அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து ஏர் டிராபிக் கட்டுப்பாட்டாளர் விமானிக்கு சரியான நேரத்தில் தகவல் வழங்கியுள்ளார். தீயணைப்பு துறையினர் சரியான நேரத்திற்கு சென்று தீயை அணைத்து பெரும் அசம்பாவிதத்தை தடுத்துள்ளனர். விமானத்தில் இருந்த 276 பயணிகள் மற்றும் 21 விமான குழுவினர் ஆகியோர் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரை இறங்க தயாராக இருந்த விமானம் திடீரென தீ பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News