5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cave on Moon : நிலவில் குகை கண்டுபிடிப்பு.. மனிதர்களை கூட அதில் தங்க வைக்கலாமாம்.. விஞ்ஞானிகள் கூறும் சுவாரஸ்ய தகவல்கள்!

Cave on Moon | இத்தாலியை சேர்ந்த ஆராய்ச்சி குழு நிலவின் மேற்பரப்பில் குகைக்கான வழியை கண்டுபிடித்துள்ளது. இந்த குகை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்த இடத்தில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Cave on Moon : நிலவில் குகை கண்டுபிடிப்பு.. மனிதர்களை கூட அதில் தங்க வைக்கலாமாம்.. விஞ்ஞானிகள் கூறும் சுவாரஸ்ய தகவல்கள்!
நிலவில் குகை
vinalin
Vinalin Sweety | Updated On: 16 Jul 2024 15:37 PM

நிலவில் குகை : உலகில் பல அதிசயங்கள் நிறைந்துள்ளன. அவை எப்படி உருவாகியது, அதற்கு காரணம் என்ன என விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி ஒரு அதிசயத்திற்கு உரியது தான் நிலவு. நிலவில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும்,  தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நிலவின் தென் துருவத்தில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் நோக்கில் உலக நாடுகள் போட்டி போட்டு செயற்கை கோள்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்தகைய ஆய்வில் தான் விஞ்ஞானிகள், நிலவு குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, நிலவில் குகை இருப்பதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

நிலவில் குகை இருப்பதை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்

இத்தாலியை சேர்ந்த ஆராய்ச்சி குழு நிலவின் மேற்பரப்பில் குகைக்கான வழியை கண்டுபிடித்துள்ளது. இந்த குகை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்த இடத்தில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாசாவின் லூனார் ரீ கனைசென்ஸ் ஆர்பிட்டரின் ரோடார் அளவீடுகளை அய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், அதை பூமியில் உள்ள எரிமலைகளுடன் ஒப்பிட்டு பார்த்து நிலவில் குகைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தங்க ஏதுவாக இருக்கும்

இந்த குகைகள் நிலவில் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ள உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காரணம், நிலவில் மோசமான வானிலை நிலவும். எனவே இந்த குகைகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் மோசமான வானிலையில் இருந்து பாதுகாப்பாக ஆய்வு மேற்கொள்ள முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நிலவில் இந்த குகை மேரே டிரான்குவிலிடாஸ் என்ற பகுதியில் அமைத்துள்ளதாகவும், அது எரிமலை குழம்பால் உருவாகப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : Top 10 Countries | அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 10 நாடுகள்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

நிரந்தர ஆய்வகம் அமைக்க திட்டமிடும் உலக நாடுகள்

நிலவில் நிரந்தரமாக தங்கி ஆய்வு செய்யும் ஒரு ஆய்வகத்தை அமைப்பது குறித்து நாசா ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதேபோல சீனா மற்றும் ரஷ்யா ஆடுகிய நாடுகளும் நிலவில் ஆய்வு மையத்தை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால் நிலவின் மோசமான வானிலை காரணமாக அது சாத்தியமற்றதாகவும், சவால் நிறைந்ததாகவும் இருந்தது. ஆனால் தற்போது ஆராய்ச்சியாளர்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ள இந்த குகைகள் பாதுகாப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News