நீல நிறத்தில் இருந்து பச்சை நிறமாக மாறும் கடல்கள்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Sea | நாசா செயற்கைக்கோள்களின் கடந்த 20 ஆண்டுகள் தரவுகளின்படி உலகின் பெருங்கடல்கள் பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிற மாற்றத்திற்கு காரணம் பைட்டோபிளாங்க்டன்கள் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமன்றி அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் விஞ்ஞானிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
நிறம் மாறும் கடல் : நமது பூமியின் 70%-க்கும் அதிகமான பகுதிகளை உள்ளடிக்கிய பெருங்கடல்கள் மர்மமான முறையில் நீல நிறமாக மாறி பச்சை நிறமாக மாறுகின்றன. இங்கிலாந்தின் தேசியல் கடல்சார் மையத்தின் பிபி கேல் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. நாசா ஆக்வா செயற்கைக்கோளில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் 20 வருட தரவுகளை ஆராய்ந்து பார்த்தால் 56% கடல் நீர் நீல நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறியுள்ளது. குறிப்பாக பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2002 முதல் 2022 வரை சுமார் 20 ஆண்டுகளின் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் தரவுகளை ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இந்த நிற மாற்றம் ஏற்பட என்ன காரணம்?
கடல் நீர் நிறத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு கடலில் உள்ள பைட்டோபிளாங்க்டன் தான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கடல் வாழ் உயிரினங்கள் தான் கடலை பச்சை நிறத்தில் காட்சியளிக்க செய்கின்றன என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அவை கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. இதன் விளைவாக பைட்டோ பூக்கம் உருவாகின்றன. பைட்டோபிளாங்க்டனில் பச்சை நிறமி குளோரோபில் உள்ளது. இதனால் அவை கடலில் பசுமையாக காட்சியளிக்கிறது.
இதையும் படிங்க : Sunitha Williams: பூமிக்கு திரும்ப முடியாத நிலையில் சுனிதா வில்லியம்ஸ்.. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு..!
யார் இந்த கேல்?
இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் உள்ள தேசிய கடல்சார் மையத்தின் விஞ்ஞானி பிபி கேல் பச்சைப் பெருங்கடலைப் பற்றிப் பேசினார், அப்போது “நிறம் என்பது மனித மொழியில் விவரிக்க முடியாதவை, நீங்கள் அதை நன்றாகப் பார்க்க முடியும்” என கூறினார். கேல், நாசா செயற்கைக்கோள்களின் தரவுகளை ஆராய்ந்து கடல் நீர் நிற மாற்றத்திற்கான ஆய்வை மேற்கொள்ளும் குழுவின் தலைவர் ஆவார். மனித செய்லபாடுகள் பெருங்கடல்களை எவ்வாறு பாதிக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அது மனித நடவடிக்கைகள் பூமியில் உள்ள வழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான கூடுதல் சான்றுகளும் அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பானி பூரியை தொடர்ந்து ஷவர்மாவிலும் ஆபத்து.. கொடிய கிருமிகள் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
பைட்டோபிளாங்க்டன் ஆராய்ச்சி
விஞ்ஞானிகள் பைட்டோபிளாங்க்டன் வளர்ச்சியையும் அவற்றின் சமூகங்களையும் மிக தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர், ஏனெனில் அவை காலநிலை மாற்றத்திற்கும் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே நீல நிற வைரஸ்கள் எவ்வாறு பச்சை நிறத்தில் வெளிவருகின்றன என்பதை அவற்றின் குளோரோபில் விகிதத்தை வைத்து கண்காணிக்கின்றனர்.