5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விண்வெளியிலும் நுண்ணுயிரிகள்.. தீவிர ஆராய்ச்சியில் இறங்கிறய விஞ்ஞானிகள்!

Microorganism | பூமியை போலவே விண்வெளியிலும் நுண்ணுயிரிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நுண்ணுயிரிகள் உருமாற்றம் மூலம் சூழலுக்கு ஏற்றார் போல எவ்வாறு தற்காத்து கொள்கின்றன என்பதை கண்டறிந்துள்ளதாகவும், இதன் மூலம் நுண்ணுயிரிகளை அழிப்பதற்கான மருந்துகளையும் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

விண்வெளியிலும் நுண்ணுயிரிகள்.. தீவிர ஆராய்ச்சியில் இறங்கிறய விஞ்ஞானிகள்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 08 Jul 2024 12:46 PM

நுண்ணுயிரிகள் என்றால் என்ன : நுண்ணுயிரிகள் மைக்ரோ அளவை கொண்ட மிகச் சிறிய உயிரினங்களாகும். அவற்றை நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியாது. அவற்றை நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்க முடியும். ஏனெனில் அவை மிக சிறிய அளவை கொண்டவை. எந்த அளவுக்கு சிறியவை என்றால், நமது தலைமுடியில் ஒன்றை எடுத்து அவற்றை 1000 ஆக பிரித்தால் எந்த அளவுக்கு சிறியதாக இருக்குமோ அந்த அளவிற்கு தான் இந்த நுண்ணியிரிகளும் இருக்கும். மனித உடலில் தொடங்கி காய்கறி, பழங்கள் என அனைத்திலும் இந்த நுண்ணுயிரிகள் இருக்கின்றன. சொல்லப்போனால் இந்த உலகத்தை உருவாக்கியதே நுண்ணியிரிகள் தான் என கூறப்படுகிறது. நுண்ணுயிரிகள் எந்த அளவிற்கு பாதுகாப்பானவையோ அந்த அளவிற்கு ஆபத்தானவையும் கூட. ஏனெனில் நோய் தொற்றுகள் பறவுவதற்கு காரணமே இந்த நுண்ணுயிரிகள் தான்.

நுண்ணுயிரிகளால் உண்டான நோய் தொற்றுகள்

பெரும்பாலான நோய் தொற்றுகள் உருவாவதற்கு காரணமே இந்த நுண்ணுயிரிகள் தான். இந்த நுண்ணுயிர்கள் மனித உடலுக்கு நன்மை பயக்குவையாக இருந்தாலும் அதே சமையம் ஆபத்து மிக்கவையாகவும் இருக்கின்றன. ஏனென்றால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகையே உலுக்கிய கொரோனா தொற்றும் Covid 19 என்ற நுண்ணுயிரியால் உருவானதுதான். இதேபோல பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், மூளை காய்ச்சல் உள்ளிட்ட சில கொடிய நோய்களுக்கு காரணமாக இந்த நுண்ணுயிரிகள் தான் இருக்கின்றன.

இதையும் படிங்க : நீல நிறத்தில் இருந்து பச்சை நிறமாக மாறும் கடல்கள்.. 
ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

விண்வெளியிலும் நுண்ணுயிரிகள்

இந்நிலையில் தான், விண்வெளியிலும் நுண்ணுயிரிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து சென்னை ஐஐடி பேராசிரியர் கார்த்திக் ராமன், மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர் கஸ்தூரி வெங்கடேஸ்வரன் ஆகியோர் நாசா விஞ்ஞானிகளோடு இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து – எதிர்ப்பு நோய் கிருமிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ராட்சத விலங்குகள் அழிவுக்கு காரணம் மனிதர்களா?.. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது என்ன?

நுண்ணுயிரிகளை அழிப்பதற்கான மருந்துகளை கண்டறிய முடியும்

விண்வெளியில் நுண்ணுயிர்கள் கண்டறியப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நுண்ணுயிரிகள் எவ்வாறு வளர்கின்றன என்பது குறித்தான ஆராய்ச்சிகள் மூலம் நுண்ணுயிரிகள் உருமாற்றம் மூலம் சூழலுக்கு ஏற்றார் போல எவ்வாறு தற்காத்து கொள்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நுண்ணுயிரிகளை அழிப்பதற்கான மருந்துகளையும் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Latest News