செல்ஃபி விபரீதம்.. ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளம்பெண்.. ஷாக் வீடியோ! - Tamil News | Selfie Tragedy.. Young Girl Killed by Train.. Shock Video! | TV9 Tamil

செல்ஃபி விபரீதம்.. ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளம்பெண்.. ஷாக் வீடியோ!

Updated On: 

07 Jun 2024 11:35 AM

செல்ஃபி விபரீதம்..  ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளம்பெண்.. ஷாக் வீடியோ!

உயிர்ழந்த பெண்

Follow Us On

மெக்சிகோவில் கடந்த ஜூன் 3ஆம் தேதி ஹிடால்கோ அருகே நீராவி இயந்திரத்துடன் கூடிய ’பேரரசி’ என்று அழைக்கப்படக்கூடிய பழங்கால ரயில் அன்றுடன் தனது கடைசி பயணத்தை நிறைவு செய்ய இருந்ததால், போட்டோ எடுப்பதற்காக பலர் அந்த இடத்தில் குவிந்தனர். அப்போது, அங்கு கூடியிருந்தவரிகள் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ரயிலுக்கு அருகில் சென்று செஃல்பி எடுக்க முயற்சி செய்தார். அப்போது ஹிடால்கோ அருகே நீராவி இயந்திர ரயில் வந்த போது, தண்டவாளத்திற்கு அருகில் சென்றார். அப்போது ரயில் அந்த பெண்ணை இடித்துவிட்டு சென்று கொண்டிருந்தது. தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Also Read: Video: இணையத்தில் கவனம் பெறும் மம்முட்டியின் ‘மாயிகா மனமே’ பாடல் வீடியோ

கனேடிய பசிபிக் கன்சாஸ் சிட்டியை (CPKC) உருவாக்கிய நட்பு ரீதியான இணைப்பைக் கொண்டாடும் விதமாக, 1930 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு நீராவி இன்ஜின் ரயில் ஒன்று கால்கரியில் இருந்து புறப்பட்டு கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிகோ நகரில் நிறைவடையும், கடந்த ஏப்ரல் மாதம் புறப்பட்ட இந்த ரயில், நாளை மெக்சிகோவில் தன் பயணத்தை நிறைவு செய்யும். இந்த நிகழ்விற்கு மீட்டெடுக்கப்பட்ட ரயில் பின்னர், ஜூலை மாதம் கனடா திரும்பும். அத்துடன் அங்கு அது ஓய்வு பெறும்.

இப்படி புகழ்பெற்ற ரயிலை புகைப்படம் எடுப்பதற்காகப் பலரும் ஹிடால்கோ அருகே கூடிய நிலையில் பெண் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. இறந்த போன அந்தப் பெண் உயிரிழந்த போது அவரின் மகனும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Narendra Modi : ஒருமனதாக தேர்வான நரேந்திர மோடி.. 8ம் தேதி பிரதமராக பதவியேற்பு என தகவல்

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள, கனடிய பசிபிக் கன்சாஸ் சிட்டி (CPKC) நிறுவனம், இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த பெண் தண்டவாளத்திற்கு மிக அருகில் வந்ததே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version