Bangladesh Protest : அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்.. ஷேக் ஹசீனா விளக்கம்!

Sheikh Hasina | பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த நிலையில் இந்தியாவில் தஞ்சமடைந்தார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு ராணுவம் ஆட்சிய கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நிலமை கட்டுக்குள் வராத நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதின் உத்தரவிட்டார்.

Bangladesh Protest : அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்.. ஷேக் ஹசீனா விளக்கம்!

ஷேக் ஹசினா

Published: 

12 Aug 2024 09:43 AM

வங்கதேச போராட்டம் : வங்கதேசத்தில் தகுதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க கோரி மாணவர்கள் போரட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் மாபெரும் வன்முறையாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு நிலமை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நிலமை மோசமாகியுள்ளது. இதன் காரணமாக அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த நிலையில் இந்தியாவில் தஞ்சமடைந்தார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு ராணுவம் ஆட்சிய கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நிலமை கட்டுக்குள் வராத நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதின் உத்தரவிட்டார். இந்நிலையில் அமெரிக்காவின் சதியால் தான் ஆட்சியை இழந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Bangladesh Protest : தீவிரமடைந்த வங்கதேச வன்முறை.. அடித்து கொலை செய்யப்பட்ட நடிகர்.. அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன் – ஷேக் ஹசீனா

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். இது குறித்து அவர் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, வங்கதேசத்துக்கு சொந்தமான செயின்ட் மார்ட்டின் தீவை தங்களிடம் ஒப்படைக்க அமெரிக்க வலியுறுத்தியது. அப்படி அந்த தீவை அமெரிக்காவுக்கு வழங்கியிருந்தால், ஆட்சியில் நீடித்திருப்பேன். ஆனால் வங்கதேசத்தின் நலனுக்காக மட்டுமே நான் முன்னுரிமை அளித்தேன். தற்போது அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Olympic 2024 : பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் இடம் பிடித்த அமெரிக்கா.. இந்தியாவுக்கு எந்த இடம்?

நான் பேசியதை திரித்து கூறி மாணவர் போராட்டத்தை தூண்டினர் – ஷேக் ஹசீனா

“நான் பேசியதை திரித்து கூறி மாணவர் போராட்டத்தை சிலர் தூண்டினர். போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பதை நான் விரும்பவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி, பதவியை ராஜினாமா செய்தேன். வங்கதேச மக்களுக்கு ஒரு வேண்டுகோள், சமூக விரோதிகளை நம்பி ஏமாராதீர்கள். அவர்களை எதிர்த்து நில்லுங்கள். அவாமி லீக் கட்சியினர், பொதுமக்கள் தாக்கப்படுவது எனக்கு வருத்தமளிக்கிறது. நாட்டின் விடுதலைக்காக  எனது தந்தையும், குடும்ப உறுப்பினர்களும் உயிர் தியாகம் செய்துள்ளனர். வங்கதேசம் மற்றும் நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பிராத்தனை செய்வேன். இறைவன் அருளால் மீண்டும் வங்கதேசத்துக்கு திரும்பி வருவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வங்கதேசத்தின் அரசின் இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார். சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ள யூனுஸ், வங்கதேசத்தில் ஏழைகளின் வங்கியாளர் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?