Viral Video: ஓடும் ரயில் முன் டிக்டாக் வீடியோ.. கணநேரத்தில் சிறுவனுக்கு நேர்ந்த கதி!
Bangladesh: ரயில் என்ஜின் அந்த சிறுவனின் மேல் பயங்கரமாக மோத செல்ஃபி எடுத்த நபர் சிதறி ஓடினார். அதைத் தொடர்ந்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவரது நண்பர்களின் முகங்களில் தெரியும் அதிர்ச்சியும் திகிலும் இந்த விபத்து எப்படிப்பட்டது என்பதை சொல்கிறது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்த சிறுவன் லிகானை மீட்டு ரங்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதிர்ச்சி வீடியோ: வங்கதேசத்தில் ஓடும் ரயில் முன் டிக்டாக் வீடியோ எடுக்க முயன்ற சிறுவன் ரயில் மோதி படுகாயமடைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. இந்த விபத்தானது ரங்பூரில் உள்ள சிங்கிமாரா பிரைட் ரயில் பாதையில் நடைபெற்றுள்ளது. கடந்த அக்டோபர் 24 ஆம் தேதியன்று ஆபத்தை அறியாமல் சிறுவர்கள் சிலர் ஒன்று போஸ் கொடுத்து வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது. இந்த வீடியோ பார்க்கவே மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதால் இணையவாசிகள் இதயம் பலவீனமானவர்கள் பார்க்காமல் தவிர்க்குமாறு கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர். எக்ஸ் வலைத்தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் சிறுவர்கள் நடனமாடுவது மற்றும் டிராக்கில் போஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
டிக்டாக் வீடியோ எடுப்பதில் அனைவரும் ஆர்வமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். அப்போது செல்ஃபி எடுக்கும் பொருட்டு குழுவினர் ஒன்று கூடிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பின்பக்கத்தில் சற்று தூரத்தில் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது 5 பேரில் 4 பேர் தண்டவாளத்தை விட்டு விலகி நின்றனர். ஒரு சிறுவன் மட்டும் ரயில் மெதுவாக வருவதாக நினைத்து தண்டவாளத்திற்கு அருகில் நின்று போஸ் கொடுக்க, இன்னொருவன் செல்ஃபி எடுக்கிறான்.
அப்போது ரயில் என்ஜின் அந்த சிறுவனின் மேல் பயங்கரமாக மோத செல்ஃபி எடுத்த நபர் சிதறி ஓடினார். அதைத் தொடர்ந்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவரது நண்பர்களின் முகங்களில் தெரியும் அதிர்ச்சியும் திகிலும் இந்த விபத்து எப்படிப்பட்டது என்பதை சொல்கிறது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்த சிறுவன் லிகானை மீட்டு ரங்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அந்த சிறுவன் தற்போது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
“Don’t risk your life for likes & reach 📵 😤
This tragic incident serves as a reminder for everyone to be cautious and prioritize safety. Parents, please educate the new generation about the dangers of social media stunts. #SafetyFirst#TrainAccident https://t.co/4zOjF5eREY— Know it Better (@Not2doo) October 27, 2024
இந்த சம்பவம் அடங்கி வீடியோவைப் பார்த்த பலரும் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், இதுபோன்ற விஷயங்களில் ஆபத்தை உணராமல் மக்கள் ஆசியாவில் அடிக்கடி விபத்தில் சிக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தொடரும் விபத்துகள்
இந்தியாவை பொறுத்தமட்டில் ரயில் விபத்துக்கள் தொடர் கதையாகி வருகின்றது. ஒரு பக்கம் தொழில்நுட்பக் கோளாறுகளால் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியோ, தடம் புரண்டோ விபத்துக்கள் ஏற்படுகிறது. மறுபக்கம் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளங்களை கடப்பது, ரயில்களில் படியில் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்வது, படிகளில் நின்று கொண்டு அல்லது ரயில் புறப்படும் நேரத்தில் ஓடி வந்து ஏற முற்படுவது என விதவிதமான நிகழ்வின்போது படுகாயங்கள் தொடங்கி உயிரிழப்புகள் வரை நிகழ்கிறது.
இதனைத் தடுக்க இந்திய ரயில்வே துறை தொடர் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் குற்றச் செயல்கள் குறைந்தபாடில்லை. அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்டு வரும் நிலையில் ஆபத்தை உணராமல் ரயிலின் மேற்பகுதியில் ஏறி செல்பி எடுக்க முற்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ரயில் வரும்போது இருப்புப் பாதை அருகில் நிற்கக்கூடாது என எவ்வளவோ எச்சரிக்கை விடுத்தும் ஆர்வம் மிகுதியில் அதன் அருகில் சென்று பார்ப்பவர்கள் அதிகம்.
ரயில் நிலையங்களில் இருப்பவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் எச்சரிக்கை விடுக்கும் நிலையில், மற்ற இடங்களில் மக்களாகிய நாம் தான் சுய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மற்றவர்களையும் விதிமுறைகளை பின்பற்றி நடக்க சொல்ல வேண்டும்.