நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் விமானம்.. 200 பயணிகளின் நிலை என்ன? திக் திக்! - Tamil News | | TV9 Tamil

நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் விமானம்.. 200 பயணிகளின் நிலை என்ன? திக் திக்!

Updated On: 

21 May 2024 18:20 PM

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் நடுவானில் குலுங்கியது. மூன்று நிமிடங்கள் விமானம் கடுமையாக குலுங்கியது. இதனால், அங்கிருந்த பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. குலுங்கிய அரை மணி நேரத்திற்குள் விமானம் பாங்காக் நகருக்கு திருப்பிடப்பட்டு அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில், 30 பயணிகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் விமானம்..  200 பயணிகளின் நிலை என்ன? திக் திக்!

சிங்கப்பூர் விமானம் (Picture Courtesy: Twitter/@MarioNawfal)

Follow Us On

நடுவானில் குலுங்கிய விமானம்: லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கு SQ321 விமானம் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே மோசமான வானிலை காரணமாக நடுவானில் விமானம் குலுங்கியது. மூன்று நிமிடங்கள் விமானம் கடுமையாக குலுங்கியது. விமானம் 31,000 அடி (9,400 மீட்டர்) உயரத்தில் விமானம் குலுங்கியதாக தெரிகிறது.  இதனால், அங்கிருந்த பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. குலுங்கிய அரை மணி நேரத்திற்குள் விமானம் பாங்காக் நகருக்கு திருப்பிடப்பட்டு அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில், 30 பயணிகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

200 பயணிகளின் நிலை என்ன?

சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள சமிதிவேஜ் ஸ்ரீநகரின் மருத்துவமனையின் அவசரக் குழுவினர் காயமடைந்த பயணிகளை விமானத்தில் இருந்து சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஓடுபாதையில் இருந்தனர்.  பின்னர்,  காயமடைந்த பயணிகளை மீட்டு அம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறுகையில், “இது ஓர் அரிதான சம்பவம். லண்டனில் இருந்து சிங்கப்பூருக் போயிக் 777-300ER SQ321 விமானம் வழியால் கடுமையாக குலுங்கியது. மோசமான வானிலை காரணமாக விமானம் குலுங்கியது. உடனே, விமானம் பாங்காக் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதில், ஒரு பயணி உயிரிழந்தார்.

இதனை நங்கள் உறுதி செய்கிறோம். இறந்தவரின் குடும்பத்தினருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. காயம் அடைந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம்.  பயணிகளுக்கு தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நடுவானில் விமானம் குலுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Also Read : இஸ்ரேலை பரம எதிரியாக கருதிய ரைசி.. ஈரானின் அடுத்த அதிபர் யார்?

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version