5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சிங்கப்பூரின் 4வது பிரதமராக பதவியேற்றார் லாரன்ஸ் வாங்.. அமைச்சரவையில் இடம்பெற்ற இந்தியர் யார்?

51 வயதான லாரன்ஸ் வாங், சிங்கப்பூரின் பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். அவருக்கு சிங்கப்பூர் குடியரசு தலைவர் தர்மன் சண்முகரத்னம் நேற்று பதிவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும், துணைப் பிரதமர்களாக கான் கிம் யோங் மற்றும் ஹெங் ஸ்வீ கீட் ஆகியோரும் பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து 14 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

சிங்கப்பூரின் 4வது பிரதமராக பதவியேற்றார் லாரன்ஸ் வாங்.. அமைச்சரவையில் இடம்பெற்ற இந்தியர் யார்?
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 May 2024 09:32 AM

புதிய பிரதமர் லாரன்ஸ் வாங்: சிங்கப்பூரில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் லீ சியென் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வந்தது. சுமார் 20 ஆண்டுகளாக நாட்டின் பிரதமர் பதவியை வகித்து வந்த லீ சியென் லூங், மே 15ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். 70 வயதிலையே லீ தனது பிரதமர் ராஜினாமா செய்தவதாக திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனா தொற்று காரணமாக லீ திட்டமிடல் தாமதாகின. இந்தநிலையில் தான், மே 15ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து, லீ சியெ லூங் தலைமையில் துணை பிரதமராக இருந்த லாரன்ஸ் தற்போது சிங்கப்பூரின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

Also Read : பெரும் பரபரப்பு… பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு.. என்னாச்சு?

51 வயதான லாரன்ஸ் வாங், சிங்கப்பூரின் பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். அவருக்கு சிங்கப்பூர் குடியரசு தலைவர் தர்மன் சண்முகரத்னம் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும், துணைப் பிரதமர்களாக கான் கிம் யோங் மற்றும் ஹெங் ஸ்வீ கீட் ஆகியோரும் பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து 14 அமைச்சர்கள் பதவியேற்றனர். குறிப்பாக, சிங்கப்பூர் நாட்டின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது, முரளி பிள்ளை என்பவர் சட்டம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, வோங் தனது சமூக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது, “சிங்கப்பூரின் 4வது பிரதமராகப் பதவியேற்றதில் நான் பெருமைப்படுகிறேன். நமது நாட்டின் முன்னேற்றத்தில் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கும். இந்த அரசு எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். பொதுவான நோக்கம் மற்றும் பொதுவான தீர்மானத்துடன் ஒன்றுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read : ‘ரெட் லிப்ஸ்டிக்கிற்கு தடை” மீறினால் அவ்வளவுதான்… எங்கு தெரியுமா?

புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் யார்?

2011ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி சார்பில் போட்டியிட்டு 66 சதவீதம் வாக்குளில் வெற்ற பெற்ற லாரன்ஸ் வோங், பாதுகாப்பு மற்றும் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். அடுத்தடுத்து பல்வேறு துறைகளில் அமைச்சராக பதவி வகித்த அவர், துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கிட் அடுத்த பிரதமராக கடந்த 2018ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தனது வயதை காரணம் காட்டி, ஏப்ரல் 2021ல் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனை அடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு துணை பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Latest News