Nick Jonas: நெற்றிக்கு வைக்கப்பட்ட குறி.. மேடையில் இருந்து தெறித்து ஓடிய நிக் ஜோனஸ்!
அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸ் மற்றும் அவரது சகோதரர்களான ஜோ மற்றும் கெவின் ஜோனாஸ் ஆகிய 3 பேரும் செக் குடியரசு நாட்டில் உள்ள ப்ராக் நகரில் நேற்றைய தினம் இசை நிகழ்ச்சி நடத்தினர். அப்போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். அந்த சமயம் நிக் ஜோனஸ் பாடிக்கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ அவரது தலையின் மீது லேசர் விளக்கின் சிவப்பு நிறம் படுவதை ஜோனாஸின் சகோதரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செக் குடியரசு நாட்டில் நிக் ஜோனாஸ் நடத்திய இசை நிகழ்ச்சியின் போது நடைபெற்ற சம்பவம் ஒன்று பெரும் பேசுபொருளாகியுள்ளது. அவரது தலையில் லேசர் ஒளி மூலம் குறிவைக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனால் மேடையில் இருந்து அவர் ஓட்டம் எடுத்தார். நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவத்தால் ரசிகர்கள் வருத்தமடைந்தனர். மேலும் அந்த நபர் வெளியேற்றப்பட்ட பிறகு நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்டவர் நிக் ஜோனஸ் . 7 வயதில் நடிக்கத் தொடங்கிய அவர், 2002 ஆம் ஆண்டு தனது முதல் பாடலை வெளியிட்டார். நிக் ஜோன்ஸ் தனது மூத்த சகோதரர்களான கெவின் மற்றும் ஜோவுடன் ஜோனஸ் பிரதர்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு இசைக்குழுவை உருவாக்கினார். இந்த குழு அமெரிக்காவின் பிரபலமான இசைக்குழுவில் ஒன்றாக இயங்கி வருகிறது.
இதனிடையே அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸ் மற்றும் அவரது சகோதரர்களான ஜோ மற்றும் கெவின் ஜோனாஸ் ஆகிய 3 பேரும் செக் குடியரசு நாட்டில் உள்ள ப்ராக் நகரில் நேற்றைய தினம் இசை நிகழ்ச்சி நடத்தினர். அப்போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். அந்த சமயம் நிக் ஜோனஸ் பாடிக்கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ அவரது தலையின் மீது லேசர் விளக்கின் சிவப்பு நிறம் படுவதை ஜோனாஸின் சகோதரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் சிறுது நேரம் ஜோனாஸ் சகோதரர்களின் இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் நிக் ஜோனஸ் மேடையில் இருந்து ஓடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இதனையடுத்து டெய்லி நியூஸ் இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டுள்ள தகவலில், நிக் ஜோனாஸ் மேடையில் அமர்ந்திருந்தார். திடீரென எழுந்து நின்று மேடைக்கு அருகில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்களுக்கு சைகை காட்டிவிட்டு மேடையை விட்டு ஓடத் தொடங்கினார். பாதுகாவலர்கள் பாடகரை பின்தொடர்ந்தனர். இதற்கிடையில், கெவின் மற்றும் ஜோ மேடையில் இருந்தனர். பிராக் நகரில் ஜோனாஸ் சகோதரர்கள் தங்கள் நிகழ்ச்சியை சிறிது நேரம் நிறுத்த வேண்டியிருந்தது, அப்போது பார்வையாளர்களில் ஒருவர் நிக்கைக் குறிவைத்து லேசரைக் காட்டினார். அந்த நபர் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்தது.
Pessoal, uma fã subiu esse vídeo onde mostra exatamente o momento que o laser mira no Nick durante a performance no palco B.
Acredita-se que ele tenha se assustado. Não se sabe ainda a origem do lazer.
O show continuou normalmente, após a pausa.Oq acham? #nickjonas pic.twitter.com/fCi2ba8X4S
— Jonas Brothers Brasil (@JBoficialBR) October 15, 2024
ஜோனாஸ் பிரதர்ஸின் ப்ராக் கச்சேரியின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களுக்கு ரசிகர்கள் கவலை தெரிவித்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். “முற்றிலும் திகிலூட்டும்படியான சம்பவம் நடந்துள்ளது. நிக் ஜோனஸ் நலமாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி” என ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோல் இன்னொருவர் “நிகழ்ச்சியை நிறுத்த முயற்சிக்கும் போது மக்கள் நிக் ஓடுவதை வீடியோ எடுக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் என்ன பிரச்னை?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
Also Read: Puducherry: 8 ஆண்டுக்கு பின் ரேஷன் கடை திறப்பு.. புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி கிஃப்ட்!
நிக் ஜோனஸ், பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவை 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இருவருக்கும் 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது. நிக்கை விட பிரியங்கா மூத்தவர். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இதற்கிடையில், ராபர்ட் ஸ்வார்ட்ஸ்மேன் இயக்கிய காமெடி திரைப்படமான தி குட் ஹாஃப் திரைப்படத்திலும் நிக் ஜோனாஸ் நடித்து வருகிறார் . இதில் பிரிட்டானி ஸ்னோ, டேவிட் ஆர்குவெட், அலெக்ஸாண்ட்ரா ஷிப், மாட் வால்ஷ் மற்றும் எலிசபெத் ஷூ ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.