East Asia summit 2024: “போர் களத்துல பிரச்னைக்கு தீர்வு காண முடியாது” தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் பேச்சு!

பிரதமர் மோடி: இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று லாவோஸ் புறப்பட்டு சென்றார். நேற்று மாலை லாவோஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை தலைநகர் வியன்டியேனில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் விலய்வோங் பௌத்தகாம் வரவேற்றார். மேலும், அங்கு அவருக்கு இந்திய வாழ் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

East Asia summit 2024: போர் களத்துல பிரச்னைக்கு தீர்வு காண முடியாது  தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் பேச்சு!

பிரதமர் மோடி (picture credit: PTI)

Updated On: 

11 Oct 2024 16:58 PM

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று லாவோஸ் புறப்பட்டு சென்றார். நேற்று மாலை லாவோஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை தலைநகர் வியன்டியேனில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் விலய்வோங் பௌத்தகாம் வரவேற்றார். மேலும், அங்கு அவருக்கு இந்திய வாழ் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று இந்தியா – ஆசியான் அமைப்பின் 21வது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.  இதனை அடுத்து, இன்று 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு லாவோஸில் நடந்தது. ஆசியான் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

தென்கிழக்கு ஆசிய மாநாடு:

அப்போது பேசிய அவர், “நான் புத்தரின் தேசத்தில் இருந்து வருகிறேன், இது போரின் சகாப்தம் அல்ல, பிரச்சனைகளுக்கு போர்க்களத்தில் இருந்து தீர்வு காண முடியாது. போராட்ட களத்தில் இருந்து பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காது. இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம்.

மனிதாபிமான அணுகுமுறையுடன் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் நடைமுறைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோதல்கள், உலகளாவிய தெற்கின் நாடுகளில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

Also Read: டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம்.. யார் இந்த நோயல்?

யூரேசியாவாக இருந்தாலும் அல்லது மேற்கு ஆசியாவாக இருந்தாலும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் ஒரு கடுமையான சவாலாகவும் உள்ளது.

அதை எதிர்கொள்ள, மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும் சைபர், கடல்சார் மற்றும் விண்வெளி ஆகிய துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.

”போர் களத்துல பிரச்னைக்கு தீர்வு காண முடியாது”

தென் சீனக் கடலின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை இந்திய-பசிபிக் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவை. கடல்சார் செயல்பாடுகள் கடல் சட்டம் குறித்த ஐ.நா. விதிமுறைகளுக்கு இணங்கள் இருக்க வேண்டும்.

மியான்மரின் நிலைமைக்கு ஆசியான் அணுகுமுறையை நாங்கள் ஆதரிக்கிறோம். நாங்கள் ஐந்து அம்ச ஒருமித்த கருத்தையும் ஆதரிக்கிறோம். அதே நேரத்தில், மனிதாபிமான உதவியைப் பேணுவது முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம்.

Also Read: பிரதமர் மோடி பரிசாக கொடுத்த காளி கோயில் கிரீடம் திருட்டு!

அங்கு ஜனநாயகத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, மியான்மர் தனிமைப்படுத்தப்படாமல் ஈடுபட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அண்டை நாடாக இந்தியா தனது பொறுப்பை தொடர்ந்து நிறைவேற்றும்” என்றார்.

உக்ரைன் – ரஷ்யா, ஈரான்-இஸ்ரேல் நாடுகளில் போர் சூழல் நிலவி வரும் நிலையில்,  பிரச்சனைகளுக்கு போர்க்களத்தில் இருந்து தீர்வு காண முடியாது என்று ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று, இந்தியா – ஆசியான் மாநாட்டில் பேசிய மோடி, “10 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா தனது கிழக்கு சார்ந்த கொள்கைகளை அறிவித்தது. இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கும் புதிய ஆற்றலையும், வேகத்தையும் இது கொடுத்துள்ளது.

ஆசியாவின் நூற்றாண்டு என அழைக்கப்படும் 2ஆம் நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசிய நாடுகளின் நூற்றாண்டாக இருக்கும் என்று நம்புகிறேன். உலகின் பல்வேறு பகுதிகள் மோதல்கள் மற்றும் பதற்றங்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்தியா – ஆசியான் நட்புறவு, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை முக்கியமானது” என்றார்.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!