5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

South Korea : எமெர்ஜென்சியை வாபஸ் பெற்ற தென்கொரியா… கம்யூனிஸ்டுகளின் சதி திட்டமா?

Emergency Martial Law : தென் கொரியால் நேற்று இரவில் எமர்ஜென்சி சட்டத்தை அந்நாட்டு அதிபர் யூன்சுக் யோல் அறிவித்தார். அவசர நிலை அறிவித்ததை அடுத்து, அங்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எனவே, அவசர நிலை கொண்டு வந்த சில மணி நேரங்களில் வாபஸ் பெறுவதாக அதிபர் அறிவித்துள்ளார்.

South Korea : எமெர்ஜென்சியை வாபஸ் பெற்ற தென்கொரியா… கம்யூனிஸ்டுகளின் சதி திட்டமா?
தென் கொரியா அதிபர்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Dec 2024 07:09 AM

தென் கொரியால் நேற்று இரவில் எமர்ஜென்சி சட்டத்தை அந்நாட்டு அதிபர் யூன்சுக் யோல் அறிவித்தார். அவசர நிலை அறிவித்ததை அடுத்து, அங்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எனவே, அவசர நிலை கொண்டு வந்த சில மணி நேரங்களில் வாபஸ் பெறுவதாக அதிபர் அறிவித்துள்ளார். தென் கொரியா முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாகும். அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாகும்.  தென்கொரியால் மக்கள் சக்தி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அதிபராக யூன்சுக் யோல் இருக்கிறார். எதிர்க்கட்சியாக  ஜனநாயக கட்சி உள்ளது. தென் கொரியாவுக்கு, வட கொரியாகவுக்கு சமீப காலங்களில் பிரச்சை நிலவி வருகிறது. குறிப்பாக, அணு ஆயுதங்கள் தொடர்பாக இருநாடுகுள் இடையோன கடுமையான மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

எமெர்ஜென்சியை வாபஸ் பெற்ற தென்கொரியா

மேலும், அடுத்தாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதி அறிக்கை குறித்தும் எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கு பிரச்னை நிலவி வருகிறது.  இந்த சூழலில் நேற்று இரவோடு இரவாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருந்தது.  கம்யூனிச சக்திகளுக்கு எதிராக நாட்டை பாதுகாக்க எமர்ஜென்சிய அந்நாட்டு அதிபர் யூன்சுக் அறிவித்தார்.

வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகள் மற்றும் தேச விரோத சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம் என்று அதிபர் யூன் தனது உரையில் கூறினார். நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தென் கொரிய அதிபர் யூன்சுக்  யோலின் அறிவிப்பு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், அவரது சொந்த கட்சியில் இருந்து சிலரும் எதிர்ப்புகளை பதிவு செய்தன. இதனால் அவசர நிலை அறிவித்த ஒரு மணி நேரத்தில் அதிபர் யூன்சுக் யோல் திரும்ப பெற்றார்.

அவசர நிலை பிறக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர். அதாவது, 300 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 190 பேர் ஒருமனதாக இராணுவச் சட்டத்தை ஏற்க மறுத்துவிட்டனர். இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, அங்குள்ள மக்களும் போராட்டத்தில் குதித்தனர்.

Also Read : தேச துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட துறவி.. ஆதரவுக்கு யாரும் வராதது ஏன்?

பின்னணி என்ன?

ஜனநாயக அமைப்பை மீட்டெடுக்கக் கோரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீதியில் போராட்டத்தில் குதித்தனர். இது உரிமை மீறல் என எதிர்க்கட்சிகள் கூறியதுடன், அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தின.

மோசமான சூழ்நிலைகள் மற்றும் அதிகரித்து வரும் எதிர்ப்புகள் காரணமாக அதிபர் யூன்சுக் யோல் தனது முடிவை திரும்பப் பெற்றார். இதன் பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் யூன்சுக் யோல் ராணுவ சட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தார். ராணுவ சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்தே இதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆளும் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்களும் இது ஜனநாயக விரோதம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறினர்.

அதே நேரத்தில்,  சொந்தக் கட்சியின் தலைவரான ஹான் டோங்-ஹூனும் இந்த முடிவை வெளிப்படையாக விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிலும் பங்கேற்றார். பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், அதிபர் யூன் தனது முடிவைத் திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்தியது.

அமைச்சரவையின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தேசிய சட்டமன்றத்தின் முன்மொழிவு முறைப்படி அங்கீகரிக்கப்படும்என்றார்.  சில  வேலைகள் முடித்த பின் இராணுவச் சட்டம் முறையாக ரத்து செய்யப்படும் என்று யுன் உறுதியளித்தார்.

Also Read : கைவிரிக்கும் பெண்கள்.. ஆண்களின் நிலை.. பூமியில் இருந்து மறையும் தென்கொரியா!

மேலும், தேசிய சட்டமன்றத்தின் முடிவை மதிப்பதாகவும், எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் இடையே நம்பிக்கையை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக நடைமுறையைப் பேணுவதே தனது முன்னுரிமை என்று அவர் கூறினார்.

யுனின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பிற்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறினர். தென்கொரியாவில் கடைசியாக 1979ஆம் ஆண்டு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு அவசர நிலை அறிவித்த சில மணி நேரங்களில் வாபஸ் பெற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News