Srilanka: இலங்கை நாடாளுமன்ற தேர்தல்.. திசநாயக்கே கட்சி அபார வெற்றி!
இலங்கையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக்க அதிபராக வென்றார். அவர் செப்டம்பர் 23 ஆம் தேதி பதவியேற்றார். அப்போது அவரின் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் மூன்று எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி அனுராவுக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய அதிபரான அனுர குமார திசநாயக கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக்க அதிபராக வென்றார். அவர் செப்டம்பர் 23 ஆம் தேதி பதவியேற்றார். அப்போது அவரின் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் மூன்று எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி அனுராவுக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
பின்னர் புதிய நாடாளுமன்றம் அமைப்பதற்கான தேர்தல் நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 எம்.பி., க்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த 196 இடங்களுக்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள், சுயேட்டை வேட்பாளர்கள் என மொத்தம் 8,821 பேர் போட்டியிட்டனர். நாடாளுமன்ற தேர்தலுக்காக இலங்கை முழுவதும் 13,314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது.
1.17 கோடி பேர் வாக்களிக்க இருந்த நிலையில் இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பின்னர் மாவட்ட வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வந்தது.
Also Read: Elon Musk : எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு பதவி.. கொடுத்த வாக்கை காப்பாற்றிய டிரம்ப்!
இதில் தொடக்கம் முதலே அதிபர் அனுர குமார திசநாயகேவின் கட்சி முன்னிலையில் இருந்து வந்தது. இலங்கை நாடாளுமன்றத்தைப் பொருத்தவரை மொத்தம் 225 இடங்கள் உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு மொத்தம் 113 இடங்கள் தேவையாகும். ஆனால் தற்போதைய அதிபரான அனுர குமார திசநாயகவின் தேசிய மக்கள் சக்திதலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை விட அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றதால் அக்கட்சியின் வெற்றி உறுதியானது. இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் முன்னரே தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வெற்றி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இலங்கையில் வலுவான நாடாளுமன்றத்தை அனுர குமார திசநாயக அமைக்கவுள்ளார்.
அது மட்டுமல்லாமல் சஜித் பிரேமதேசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 31 இடங்களும், இலங்கை தமிழரசு கட்சிக்கு 6 இடங்களும், புதிய ஜனநாயக முன்னணி கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபர்களான மகிந்தா ராஜபக்ச குடும்ப கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 2 இடங்களும், ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளது.
Also Read: America: வெள்ளை மாளிகையில் ஜோ பைடனை சந்தித்த ட்ரம்ப் – நடந்தது என்ன?
இதேபோல் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மொத்த 6 இடங்கள் இருந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 3 இடங்களில் வென்றது. இலங்கை தமிழரசு கட்சி ஒரு இடங்களிலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு இடத்தையும், சுயேச்சை ஒரு இடத்தையும் கைப்பற்றினர். அதேசமயம் வன்னி மாவட்டத்தில் 2ல் தேசிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 3, தமிழ் தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. திரிகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 2 இடங்களிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.