5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ra Sambandhan: இலங்கை எம்.பி. இரா.சம்பந்தன் காலமானார்… அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பியுமான இரா.சம்பந்தன் காலமானார். இவர் வயது மூப்பு காணைமாக சில நாட்களாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, இரா.சம்பந்தன் சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ra Sambandhan: இலங்கை எம்.பி. இரா.சம்பந்தன் காலமானார்… அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!
இரா. சம்பந்தன்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 01 Jul 2024 11:45 AM

இரா. சம்பந்தன் காலமானார்:

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பியுமான இரா.சம்பந்தன் காலமானார். இவர் வயது மூப்பு காணைமாக சில நாட்களாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, இரா.சம்பந்தன் சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காண சம்பந்தன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டார். இந்த நிலையில்,  சம்பந்தன் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: காசாவில் சர்வநாசம்.. அட்டூழியம் செய்யும் இஸ்ரேல்.. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

இரங்கல்:

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் எனது பழைய நண்பர் மற்றும் சக ஊழியர். நாங்கள் பல நாட்கள் பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். அவரது மறைவு இலங்கை அரசியலில் ஒரு இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, “இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தன் அவர்களை இழந்து இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும்  இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கல்” என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதவரும், மறுக்க முடியாதவருமாகிய,
ஈழ தமிழ்ச் சமுகத்தின் மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவரும் ஆன, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் (Rajavarothiam Sampanthan) ஐயா, அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (30.6.2024) இரவு 11 மணியளவில் தனது 91 வது வயதில் கொழும்பில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

இலங்கை தமிழரின் அடுத்த தலைமுறை பாதுக்காப்பான வாழ்வியலை கட்டமைக்க, ஒரு சரியான அடித்தளத்தை அமைத்த தமிழின தலைவரான அவரது இழப்பு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

Also Read: வெளுத்து வாங்கும் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களில்?