5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Srilanka President Election: இலங்கையில் புதிய சகாப்தம்.. அதிபராக பதவியேற்கும் இடதுசாரி தலைவர் அனுரகுமார திசாநாயக..!

ஜனாதிபதித் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் அனுரகுமார 42.31 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 32.76 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 17 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளார்.

Srilanka President Election: இலங்கையில் புதிய சகாப்தம்.. அதிபராக பதவியேற்கும் இடதுசாரி தலைவர் அனுரகுமார திசாநாயக..!
அனுரகுமார திசாநாயக
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 23 Sep 2024 12:42 PM

இலங்கையில் புதிய ஆட்சி ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி தலைவருக்கே அந்த நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி தலைவர் அனுரகுமார திசாநாயக்க (56) வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் திஸாநாயக்கவினால் தோற்கடிக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திஸாநாயக்க அதிக பெரும்பான்மையுடன் ஜனாதிபதியாக வெற்றி பெற்றார். தற்போது நாட்டில் நிலவி வரும் ஊழல் மற்றும் நிதி நெருக்கடியில் இருந்து விடுபட 10வது ஜனாதிபதியாக வாய்ப்பு வழங்குமாறு திஸாநாயக்க விடுத்த கோரிக்கையை இலங்கை வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கடுமையான நிதி நெருக்கடி இலங்கையை உலுக்கிய பின்னர் நடைபெறும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் அனுரகுமார 42.31 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 32.76 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 17 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளார். 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பின்னர் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ரணில், நாட்டின் பொருளாதார நிலையைப் பள்ளத்தில் தள்ள முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதன் காரணமாக இந்த தேர்தல் அவருக்கு சாதகமாக அமையவில்லை.


இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்று பதவி ஏற்பார் என தேசிய மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது. திஸாநாயக்க 2019 ஜனாதிபதித் தேர்தலில் 3 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தார். ஆனால் தற்போது அவர் 42.31 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். அரசியல் பின்னணி அதிகம் இல்லாத திஸாநாயக்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பாராத வெற்றியைப் பெற்றார்.


இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதல் முன்னுரிமை வாக்குகள் எண்ணப்பட்ட பிறகும், வெற்றிக்குத் தேவையான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் எந்த வேட்பாளரும் பெறவில்லை.

Also Read: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி.. யார் இந்த சீசிங் ராஜா?

இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்கும் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் தலைவர் குமார திஸாநாயக்க வெற்றி பெற்றார். நாட்டு மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்ததாக திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது ஒருவரின் வெற்றியல்ல, நாட்டு மக்கள் அனைவரினதும் வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த அனுரகுமாரின் தலைமையுடன் இணைந்து செயற்பட இந்தியா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Latest News