5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sri Lanka Presidential Election: பொருளாதார நெருக்கடிக்கு பிறகு முதல் அதிபர் தேர்தல்.. சூடுபிடிக்கும் இலங்கை அரசியல்!

இலங்கை தேர்தல் 2024: இலங்கையில் செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் தேர்தல் நடந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆகஸ்ட் 15ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 17 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

Sri Lanka Presidential Election: பொருளாதார நெருக்கடிக்கு பிறகு முதல் அதிபர் தேர்தல்.. சூடுபிடிக்கும் இலங்கை அரசியல்!
இலங்கை அதிபர் தேர்தல்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Jul 2024 16:46 PM

இலங்கை அதிபர் தேர்தல்: இலங்கையில் செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் தேர்தல் நடந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அதிபரானார். இவருடைய அண்ணன் மஹிந்த் ராஜபக்சே பிரதமராக செயல்பட்டார். இவர் ஏற்கனவே அதிபராக இருந்தவர். இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு நாடு திவால் ஆகும் நிலைக்கு சென்றது. விலைவாசி உயர்வு நாட்டில் பெரும் போராட்டத்தையே ஏற்படுத்தியது. அரிசி, கோதுமை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்தன. பெட்ரோல், டீசல், கேஸ் சிலிணிடருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அங்கு மக்கள் கொதித்து எழுந்தார்கள். அதிபர் மாளிகையை தாக்கினர். அமைச்சர்களின் வீடுகளை எரித்தனர்.

Also Read: டொனால்டு டிரம்பை முந்தும் கமலா ஹாரிஸ்.. சூடு பிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்!

பொருளாதார நெருக்கடிக்கு பிறகு முதல் தேர்தல்:

இப்படி நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் சிறிது நாட்கள் பதுங்கி இருந்த நிலையில், அதன்பின் சிங்கப்பூர் சென்றார். மஹிந்த ராஜபக்சே உள்நாட்டிலேயே தலைமறைவானார். இதையடுத்து, விக்கிரமசிங்கே இடைக்கால அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பவர் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி வரை தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்காக ஆகஸ்ட் 15ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ரனில் விக்கிரவசிங்கே போட்டியிடபோவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவிருந்த நிலையில், நாட்டில் தேர்தல் நடத்த போதுமான நிதி இல்லாததால் காலவரையின்றி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கு 33 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 17 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதைப்போல முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, விஜயதாசராஜபக்சே, சஜித் பிரேமதசாதா ஆகியோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்? முழு விவரம் இதோ!

Latest News