சாதனை படைக்க காத்திருந்த சுனிதா வில்லியம்ஸ்க்கு அதிர்ச்சி.. விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ரத்து!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளரான சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ரத்து:
விண்வெளி ஆராய்ச்சி துறையில் நம் நாட்டில் முக்கியமானவர் சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த, இந்தியாவை பூர்விகமாக கொண்ட சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே இரண்டு முறை அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு சென்று திரும்பியுள்ளார்.
2009ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி விண்வெளிக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். இது ஜூன் 22, 2007 வரை நீடித்தது. விண்கலத்தில் இருந்தபோது, 29 மணி நேரம் 17 நிமிடங்கள் வரை திறந்த விண்வெளியில் பயணம் செய்து அதிக நேரம் ஸ்பேஸ் வால்க் செய்த பெண் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார் சுனிதா வில்லியம்ஸ்.
அவரது இரண்டாவது பயணம் ஜூலை 14 முதல் நவம்பர் 18, 2012 வரை இருந்தது. இந்த நிலையில், மூன்றாவது விண்வெளி பயணத்திற்கு தயாரான நிலையில், கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Also Read : பெண் எம்.பிக்கே இப்படியா? இரவில் நடந்த கொடூர சம்பவம்.. என்னாச்சு?
கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?
போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் அவர் விண்வெளிக்கு செல்ல தயாராக இருந்தார். இந்த விண்கலம் புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 8.04 மணிக்கு புறப்பட இருந்தது.
Indian-American astronaut #SunitaWilliams will fly to #space again tomorrow on the first crewed mission of Boeing’s #Starliner. She will make her long-awaited return to space aboard the Starliner as Boeing conducts the spacecraft’s maiden human spaceflight. pic.twitter.com/aFjcQ1GbgM
— All India Radio News (@airnewsalerts) May 6, 2024
விண்கலம் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு, அட்லஸ் V ராக்கெட்டின் ஆக்சிஜன் வெளியேறும் வால்வில் கோளாறு கண்டறியப்பட்டதால் திட்டம் நிறுத்தப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது. மீண்டும் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் மே 10ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் பயணம் செய்ய உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய சுனிதா வில்லியம்ஸ், ”சற்று பதட்டமாக இருந்தது. ஆனால், புதிய விண்கலத்தில் பயணிப்பதில் தனக்கு எந்த நடுக்கமும் இல்லை. நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் போது, அது வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும். பயணத்தில் விநாயகப் பெருமானின் சிலையை எடுத்துச் செல்லவேன். அவர் தான் என்னுடைய அதிர்ஷ்டமான கடவுள்” என்றார்.
Also Read : மீண்டும் ரஷ்யாவை ஆளப்போகும் புதின்… 5வது முறையாக இன்று பதவியேற்பு!