America : வரலாற்றில் முதல் முறையாக.. பெண் “White House Chief of Staff” தேர்ந்தெடுத்த டிரம்ப்.. யார் இந்த சூசி வைல்ஸ்! - Tamil News | Susi wiles become a first white house chief of staff in America history | TV9 Tamil

America : வரலாற்றில் முதல் முறையாக.. பெண் “White House Chief of Staff” தேர்ந்தெடுத்த டிரம்ப்.. யார் இந்த சூசி வைல்ஸ்!

Susie Wiles | 5 ஆண்டு கால இடைவெளிக்கு பின்பு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள டிரம்ப், பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அதன்படி, ஒரு பெண்ணெ White House Chief of Staff ஆக அவர் தேர்வு செய்துள்ளார். தற்போது இதுதான் பேசு பொருளாக மாறியுள்ளது.

America : வரலாற்றில் முதல் முறையாக.. பெண் White House Chief of Staff தேர்ந்தெடுத்த டிரம்ப்.. யார் இந்த சூசி வைல்ஸ்!

டொனால்ட் டிரம்ப் மற்றும் சூசி வைல்ஸ்

Published: 

08 Nov 2024 18:17 PM

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியானது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிட்ட நிலையில், டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு போட்டியில் டிரம்ப் தோல்வியை தழுவிய நிலையில், இந்த வெற்றி ஒரு வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. 5 ஆண்டு கால இடைவெளிக்கு பின்பு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள டிரம்ப், பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அதன்படி, ஒரு பெண்ணெ White House Chief of Staff ஆக அவர் தேர்வு செய்துள்ளார். தற்போது இதுதான் பேசு பொருளாக மாறியுள்ளது. ஒரு பெண் White House Chief of Staff ஆக தேர்வு செய்யப்பட்டது பேசுபொருளாக மாறியது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : President Election : பெண் அதிபர்களை ஏற்க மறுக்கும் அமெரிக்கா?.. அரசியல் வரலாறு கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது எப்படி?

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசின் பதவி காலம் முடிவடையும் தருவாயில் இருந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் அப்போதைய அதிபர் ஜோ பைடனும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜோ பைடன் சந்தித்த கடும் விமர்சனங்கள் மற்றும் சிக்கல்கள் காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரை முன்மொழிந்தார்.

ஜோ பைடனுக்கு பதிலாக களம் இறங்கிய கமலா ஹாரிஸ்

அதன்படி, கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஜோ பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதே தான் வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால், அவற்றை எல்லாம் கண்டுக்கொள்ளாத கமலா ஹாரிஸ், தொடர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். அதுமட்டுமன்றி, எதிர் போட்டியாளர் டிரம்ப் உடனும் அவர் நேரடி விவாதம் நடத்தினார். கமலா ஹாரிஸ், டிரம்ப் என இரு போட்டியாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது மட்டுமன்றி, அவர்களுக்கு ஆதரவாக பிரபலங்களும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், 295 இடங்களில் வெற்றி பெற்று அதிபரானார் டொனால்ட் டிரம்ப்.  இந்த நிலையில், 226 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை தழுவினார் கமலா.

இதையும் படிங்க : Personality Test : இளவேனில் முதல் குளிர் காலம் வரை.. உங்களுக்கு பிடித்த காலமே உங்கள் பண்புகளை சொல்லும்!

முதல் பெண் White House Chief of Staff

இந்த நிலையில் அமெரிக்க அரசில் பல புதிய மாற்றங்களை செய்து வரும் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, அமெரிக்காவின் White House Chief of Staff ஆக சூசி வைல்ஸ் என்ற பெண்ணை நியமனம் செய்துள்ளார். இந்த பெண் தான் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் White House Chief of Staff ஆவார். 67 வயதான வைல்ஸ், டிரம்பின் அரசியல் ஆலோசகர் ஆவார். கடந்த 2016, 2020 மற்றும் தற்போது நடைபெற்ற அதிபர் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் அவர் டிரம்புக்காக பணியாற்றியுள்ளார். இது குறித்து தெரிவித்த டிரம்ப், தன்னை வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற செய்த பெருமை வைல்ஸ்-ஐ சேறும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த பதவிக்கு வைல்ஸ் மிகவும் பொருத்தமானவர் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேங்காய் எண்ணெய் குடித்தால் இவ்வளவு பலன்களா?
சாப்பிட்ட உடனே வயிற்று வலியா? இதை பண்ணுங்க
குழந்தைகள் வாழ்வில் ஹீரோவாக தெரியும் அப்பா! - ஏன் தெரியுமா?
வாழ்க்கையை வளமாக மாற்ற எளிய டிப்ஸ் இதோ!