CM MK Stalin Speech : “தனித்தனி தாயின் வயிற்றில் பிறந்த அன்பு உடன்பிறப்புகள் நாம்”.. வட அமெரிக்க தமிழ்ச் சங்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
America | அமெரிக்க தமிழ்ச் சங்கத்தினருடன் சந்திப்பது, தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்பது, வெளிநாடு வாழ் தமிழர்களிடம் கலந்துரையாடுவது, அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளை சந்திப்பது ஆகியவை முதலமைச்சரின் 17 பயணத்தில் முக்கிய திட்டங்களாக இருந்தது.
அமெரிக்க தமிழ்ச் சங்க விழா : தமிழ்நாடு மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் வெளிநாடு வாழ் தமிழர்கள், தமிழரின் மரபையும், பாரம்பரியத்தையும் போற்றும் விதமாக தமிழ் சங்கங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சிக்காகோவில் வட அமெரிக்க தமிழ்ச் சங்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.
இதையும் படிங்க : TVK Party : தவெகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்?.. முதல் மாநாடு எப்போது?.. இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் நடிகர் விஜய்..
17 நாட்கள் பயணமாக அமெரிகக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலீட்டாளர்களை சந்திப்பது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன்படி, அமெரிக்க தமிழ்ச் சங்கத்தினருடன் சந்திப்பது, தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்பது, வெளிநாடு வாழ் தமிழர்களிடம் கலந்துரையாடுவது, அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளை சந்திப்பது ஆகியவை முதலமைச்சரின் 17 பயணத்தில் முக்கிய திட்டங்களாக இருந்தது.
பாரம்பரிய உடையில் பங்கேற்ற முதலமைச்சர்
இந்த நிலையில் வட அமெரிக்க தமிழ்ச் சங்க கலை விழாவில் பாரம்பரிய உடையில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்க வாழ் தமிழர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அமெரிக்க வாழ் தமிழர்களின் முகங்களை மட்டும் பார்த்து கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது. நான் இன்னும் தமிழ் மண்ணில் தான் இருக்கிறேனோ என்ற எண்ணம் வருகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : விசாரணை வளையத்தில் மகாவிஷ்ணு.. சென்னையில் காலடி எடுத்து வைத்தவுடன் கைது செய்த போலீஸ்..
தனித்தனி தாயின் வயிற்றில் பிறந்த அன்பு உடன்பிறப்புகள் நாம்
தொடர்ந்து பேசிய அவர், உங்களில் ஒருவனாக உங்கள் குடும்பத்தின் ஒருவனாக எனது நன்றியை மீண்டும் மீண்டும் தெரிவித்து கொள்கிறேன். அறிஞர் அண்ணா அடிக்கடி கூறுவார், அனைவரும் பிறக்க ஒரு தாயின் வயிறு தாங்காது என்பதால் தனித்தனி தாயின் வயிற்றில் பிறந்த அன்பு உடன்பிறப்புகள் நாம். இருப்பினும் நாம் எல்லோருக்கும் அன்பையும் பாசத்தை ஊட்டிய தாய் இருக்கிறாள். அவள் தான் தமிழ்த்தாய். தமிழை பல வகையாக அறிஞர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். ஆனால் தமிழை தமிழே என்று அழைப்பதில் இருக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
முன்னதாக தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற சிறுவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.