Telegram : டெலிகிராம் CEO அதிரடி கைது.. தீவிரவாத இயக்கங்களுடன் துணைபோவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை! - Tamil News | Telegram CEO Pavel Durov arrested in France while travelling to Azerbaijan | TV9 Tamil

Telegram : டெலிகிராம் CEO அதிரடி கைது.. தீவிரவாத இயக்கங்களுடன் துணைபோவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை!

Published: 

25 Aug 2024 20:07 PM

Telegram | மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள செயலிகளில் ஒன்று டெலிகிராம். இந்த செயலி மூலம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போலவே குழக்கள் மற்றும் தனிநபரிடம் உரையாட முடியும். தற்போது டெலிகிராம் செயலியை உலகம் முழுவதும் சுமார் 900 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Telegram : டெலிகிராம் CEO அதிரடி கைது.. தீவிரவாத இயக்கங்களுடன் துணைபோவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை!

பாவெல் துரோவ்

Follow Us On

டெலிகிராம் செயலி சி.இ.ஓ கைது : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள செயலிகளில் ஒன்று டெலிகிராம். இந்த செயலி மூலம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போலவே குழக்கள் மற்றும் தனிநபரிடம் உரையாட முடியும். தற்போது டெலிகிராம் செயலியை உலகம் முழுவதும் சுமார் 900 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சமூக ஊடக செயலிகளில் ஒன்றகா டெலிகிராம் உள்ளது. குறிப்பாக டெலிகிராம் செயலியை பெரும்பாலானோர், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களை பதிவிரக்கம் செய்ய பயன்படுத்துகின்றனர். டெலிகிராம் செயலி மக்களிடம் இவ்வளவு பிரபலமாக உள்ள நிலையில், அதன் CEO பாவெல் துரோக் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : அல்பேனியாவில் நிற வெறிக்கு ஆளான இந்திய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் சி.இ.ஓ பாவெல் துரோவ்

டெலிகிராம் செயலி சி.இ.ஓ பாவெல் துரோவ் தனது பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜனை நோக்கி சென்ற போது, பிரான்ஸில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். டெலிகிராம் செயலி, பல்வேறு சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்த படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தன. மேலும் இணையத்தில் சட்ட விரோத செயல்களை செய்வதற்கு டெலிகிராம் செயலி அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாகவும், அதனை டெலிகிராம் நிறுவனம் தடையின்றி அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுமட்டுமன்றி பயனர்களின் தகவல் மற்றும் விவரங்களை டெலிகிராம் நிறுவனம் அரசுக்கு தெரியாமல் பாதுகாப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

தீவிரவாத இயக்கங்களுடன் துணைபோவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின்படி கைது

இந்த நிலையில் தீவிரவாத இயக்கங்களுடன் துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், மோசடி, சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அனுமதிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டெலிகிராம் சி.இ.ஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நாய்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த முதலை நிபுணர்.. பிடிபட்டது எப்படி.. திடுக்கிடும் தகவல்கள்!

யார் இந்த பாவெல் துரோவ்

ரஷ்யாவில் பிறந்த டெலிகிராம் சி.இ.ஓ பாவெல் துரோவ் தற்போது துபாயில் வசித்து வருகிறார். ஏனென்றால் அங்குதான் டெலிகிராம் தலைமை நிறுவனம் அமைந்துள்ளது. பாவெல் துரோவ் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரட்டை குடியுரிமையைப் பெற்றுள்ளார். பாவெல் துரோவ் மற்றும் அவரது சகோதரர் நிகோலாய் ஆகியோர் கடந்த 2013 ஆம் ஆண்டு டெலிகிராம் செயலியை நிறுவினர். இந்நிலையில் பாவெல் துரோவ் டெலிகிராம் செயலியின் சி.இ.ஓ வாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version