Telegram : நாட்டை விட்டு வெளியேற தடை.. ரூ.46 கோடி பிணைத்தொகை.. கடும் நெருக்கடியில் டெலிகிராம் CEO!

Pavel Durov | பயனர்களின் தகவல் மற்றும் விவரங்களை டெலிகிராம் நிறுவனம் அரசுக்கு தெரியாமல் பாதுகாப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தீவிரவாத இயக்கங்களுடன் துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், மோசடி, சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அனுமதிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டெலிகிராம் சி.இ.ஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Telegram : நாட்டை விட்டு வெளியேற தடை.. ரூ.46 கோடி பிணைத்தொகை.. கடும் நெருக்கடியில் டெலிகிராம் CEO!

பாவெல் துரோவ் (AOP.Press/Corbis via Getty Images)

Updated On: 

31 Aug 2024 13:35 PM

டெலிகிராம் செயலி சி.இ.ஓ கைது : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள செயலிகளில் ஒன்று டெலிகிராம். இந்த செயலி மூலம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போலவே குழக்கள் மற்றும் தனிநபரிடம் உரையாட முடியும். தற்போது டெலிகிராம் செயலியை உலகம் முழுவதும் சுமார் 900 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சமூக ஊடக செயலிகளில் ஒன்றகா டெலிகிராம் உள்ளது. குறிப்பாக டெலிகிராம் செயலியை பெரும்பாலானோர், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களை பதிவிரக்கம் செய்ய பயன்படுத்துகின்றனர். டெலிகிராம் செயலி மக்களிடம் இவ்வளவு பிரபலமாக உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதன் CEO பாவெல் துரோக் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Donald Trump : டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு.. வெளிநாடுகளின் தலையிடல் இல்லை.. FBI திட்டவட்டம்!

டெலிகிராம் CEO கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன?

டெலிகிராம் செயலி சி.இ.ஓ பாவெல் துரோவ் தனது பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜனை நோக்கி சென்ற போது, பிரான்ஸில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். டெலிகிராம் செயலி, பல்வேறு சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்த படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தன. மேலும் இணையத்தில் சட்ட விரோத செயல்களை செய்வதற்கு டெலிகிராம் செயலி அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாகவும், அதனை டெலிகிராம் நிறுவனம் தடையின்றி அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுமட்டுமன்றி பயனர்களின் தகவல் மற்றும் விவரங்களை டெலிகிராம் நிறுவனம் அரசுக்கு தெரியாமல் பாதுகாப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தீவிரவாத இயக்கங்களுடன் துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், மோசடி, சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அனுமதிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டெலிகிராம் சி.இ.ஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Telegram : டெலிகிராம் CEO அதிரடி கைது.. தீவிரவாத இயக்கங்களுடன் துணைபோவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை!

பாவெல் துரோவ் நாட்டை விட்டு வெளியேற தடை!

டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவை கைது செய்துள்ள பிரான்ஸ் அரசு, அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது. அதுமட்டுமன்றி அவர் ஜாமின் பெற வேண்டும் என்றால் ரூ.46 கோடி பிணைத்தொகை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஜாமின் பெற்றாலும் அவர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தான் இருப்பார் என்றும், வாரத்திற்கு 2 முறை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் அவருக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?