கைவிரிக்கும் பெண்கள்.. ஆண்களின் நிலை.. பூமியில் இருந்து மறையும் தென்கொரியா!
South Korea birth rate : தென் கொரியா நாட்டில் ஆண்-பெண் பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இது நீடித்தால் அந்நாடு மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும் எனக் கூறப்படுகிறது. அந்நாட்டு பெண்களும் திருமண பந்தத்தில் ஆர்வம் குறைந்தவர்களாக உள்ளனர்.
தென்கொரியாவில் பிறப்பு விகிதம் கடும் சரிவு: நவீனமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு புகழ்பெற்ற நாடான தென் கொரியா தற்போது புதிய நெருக்கடி ஒன்றை எதிர்கொண்டு வருகிறது. ஆம். தென் கொரியாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. வெகுவாக குறைந்துவரும், மக்கள் தொகைக்கு தீர்வு காண அந்நாடு போராடி வருகிறது. இந்த போக்கு தொடர்ந்தால், நூற்றாண்டின் இறுதியில் அதன் மக்கள்தொகை தற்போதைய அளவில் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிடும் என அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு, சமூக-பொருளாதார அழுத்தங்கள் மற்றும் பாலின வேறுபாடுகள் காரணமாக கருதப்படுகின்றன.
சரியும் மக்கள் தொகை
கடந்த காலத்தில், 1983 இல், தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் ஒரு முக்கிய புள்ளியை எட்டியது. அப்போது சில நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் அடுத்த சில தினங்களில் மக்கள் தொகை வெகுவாக சரியத் தொடங்கியது.
இதன் மக்கள்தொகை, இப்போது 52 மில்லியனாக உள்ளது. இது இந்நூற்றாண்டின் இறுதியில் (70ஆண்டுகளில்) 17 மில்லியனாக சரிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரூ.75 கோடி ஹெலிகாப்டரில் கசமுசா.. அதீத மதுபோதை.. சிக்கிய இரு அதிகாரிகள்!
அரசின் திட்டம் என்ன?
இந்தப் பிரச்னையை சமாளிக்க அரசு பல்வேறு யுக்திகளை வகுத்து வருகிறது. குறிப்பாக, 30 வயதுக்கு முன் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்ற ஆண்கள் கட்டாய இராணுவ கடமைக்கு சேவை செய்ய வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், குழந்தை வளர்ப்பு, தாராளமாக வரி குறைப்பு போன்ற திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
பெண்களின் மனநிலை என்ன?
தற்கால தென் கொரிய பெண்கள் பொதுவாக குடும்பம், திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட, தனிநபர் வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றனர்.
தங்களது சுய தொழில் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகின்றனர். இந்தப் பெண்கள் பெரும்பாலும், திருமணம் செய்துக் கொள் எனப் பெற்றோர் கூறுவதை தடையாக பார்க்கின்றனர்.
இதனால் பல பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளாமலே 30 வயதை கடந்து விடுகின்றனர் என்றும் அதையும் மீறி திருமணம் செய்துக் கொண்டால் அந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
பாலின சமத்துவம்
இதற்கிடையில் தென் கொரிய அரசு பாலின சமத்துவம் பேணுவதிலும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆணும்- பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்தி பல திட்டங்களை அறிவித்துள்ளது.
இது ஆண் பெண் இடையே இணக்கத்தை ஏற்படுத்தும். குழந்தை பிறப்பு விகித சரிவை சரிகட்டும் எனவும் நம்புகிறது.
திருமண இடபெயர்வு
“திருமண இடம்பெயர்வு” என்பதை தென் கொரிய பெண்கள் விரும்புவதில்லை. இதனால் கிராமப்புற இளைஞர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அருகில் உள்ள மற்ற நாடுகளில் இருந்தும் பெண் பார்த்து திருமணம் செய்துக் கொள்ளும் நடைமுறைகளும் உள்ளன.
அதாவது, இந்த நூற்றாண்டின் (2000வது ஆண்டு) தொடக்கத்திலிருந்து, தென் கொரிய ஆண்களுக்கும் வெளிநாட்டுப் பெண்களுக்கும் இடையிலான திருமணங்களில் 70 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்தத் திருமணங்களுக்கு எதிர்ப்பும் நிலவுகிறது. மேலும், ஆழமான கலாச்சார மற்றும் சமூகப் பிரச்சினைகளையும் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாலியல் தொழிலாளிகளுக்கு பென்ஷன்.. மகப்பேறு விடுப்பு.. அதிரடி சட்டம் அமல்!