Tax Free Countries : இந்த நாடுகளில் வருமான வரியே கிடையாது.. எந்த எந்த நாடுகள் தெரியுமா? - Tamil News | These are the countries which does not have any kind of taxes | TV9 Tamil

Tax Free Countries : இந்த நாடுகளில் வருமான வரியே கிடையாது.. எந்த எந்த நாடுகள் தெரியுமா?

Updated On: 

30 Jul 2024 19:24 PM

Countries without tax | உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வருமான வரி விதிக்கப்படுகிறது. அதேபோல இந்தியாவிலும் வருமான வரி விதிக்கப்படுகிறது. அதன்படி, குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அரசுக்கு வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால் சில நாடுகளில் வருமான வரியே இல்லையென்றால் உங்களால் நம்ப முடிகிறதா உண்மை தான். 

1 / 6உலகில்

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வருமான வரி விதிக்கப்படுகிறது. அதேபோல இந்தியாவிலும் வருமான வரி விதிக்கப்படுகிறது. அதன்படி, குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அரசுக்கு வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால் சில நாடுகளில் வருமான வரியே இல்லையென்றால் உங்களால் நம்ப முடிகிறதா உண்மை தான். 

2 / 6

மிக அழகான கடற்கரை மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றது மொனாக்கோ. இது பணக்காரர்களின் சொர்க்க பூமியாக விளங்கினாலும் இங்கு தனிப்பட்ட வருமான வரி கிடையாது. 

3 / 6

மொனாக்கோவை போலவே பிரம்மிக்க வைக்கும் கடற்கரைகள் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை கொண்டதுதான் பஹாமாஸ். இங்கு வருமான வரி கிடையாது. 

4 / 6

நவீன வாழ்க்கை முறையை கொண்ட துபாய் மற்றும் அபுதாபி மக்களுக்கு தனிப்பட்ட வருமான வரி கிடையாது. 

5 / 6

எழில் கொஞ்சும் அழகிய தீவான பெர்முடாவில் தனிப்பட்ட வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை. அமைதியான வாழ்க்கையை அனுபவிக்க விரும்புவோருக்கு இது சிறந்த இடமாக இருக்கும். 

6 / 6

நிதிச் சேவைக்கு பெயர் போனது கேமன் தீவுகள். இங்கு தனி நபர்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. அதுமட்டுமன்றி சொத்து வரி, வணிக வரி என அதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us On
உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version