“எங்களுக்கு Rules கிடையாது”.. உலகில் சட்ட திட்டங்களே இல்லாத பகுதிகள் இவை தான்.. இதில் இந்திய பகுதியும் உள்ளது!
Places without rules | உலகில் உள்ள சில பகுதிகளில் எந்த வித சட்ட திட்டங்கள் மற்றும் ரூள்ஸ் இல்லையாம். அத்தகைய 5 இடங்களை பற்றி தான் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கப்போகிரோம். ஆச்சர்யம் என்னவென்றால் இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஒரு இடமும் உள்ளது என்பதுதான்.
சட்ட திட்டம் இல்லாத நாடுகள் : உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென தனி சட்ட திட்டங்களை கொண்டிருக்கும். அது ஒரு நாட்டை விட மற்றொரு நாட்டின் சட்ட திட்டங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும். ஒரு நாட்டில் குற்றமில்லாத செயல் மற்ற நாட்டில் குற்றமாக கருதப்படும். இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் அது வேறுபடும். ஆனால் உலகில் உள்ள சில பகுதிகளில் எந்த வித சட்ட திட்டங்கள் மற்றும் ரூள்ஸ் இல்லையாம். அத்தகைய 5 இடங்களை பற்றி தான் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கப்போகிரோம். ஆச்சர்யம் என்னவென்றால் இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஒரு இடமும் உள்ளது என்பதுதான்.
அண்டார்டிகா
அண்டார்டிகா சட்ட திட்டங்கள் இல்லாத பகுதியாக உள்ளது. முற்றிலும் பனியால் சூழப்பட்ட இந்த பகுதியில் மனிதர்கள் வாழ்வது ஆசாத்தியமானது. எனவே இங்கு அவ்வப்போது விஞ்ஞானிகள் மட்டும் ஆராய்ச்சி மேற்கொள்ள செல்கின்றனர். 1959-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு இந்த இடத்தில் ஆராய்ச்சி நடத்த அனுமதி உள்ளது. இருப்பினும் அதிகாரம் இல்லை.
இதையும் படிங்க : உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்? முழு விவரம் இதோ!
வடக்கு சென்டினல் தீவு
இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு மத்தியில் தான் இந்த வடக்கு சென்டினல் தீவு உள்ளது. இது சென்டினல் என்று அழைக்கப்படும் பழங்குடியின மக்களின் வசிப்பிடமாக உள்ளது. இந்த மக்கள் வெளி உலக மக்களுடன் தொடர்பில் இருப்பதில்லை. அவர்களை யாராவது தொடர்புக்கொள்ள முயற்சித்தாலும் அது ஆபத்தில் முடிந்துவிடும். எனவே இந்த பகுதியை அரசு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. இந்திய அரசின் சட்டங்கள் எதுவும் இந்த பகுதிக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
சிலப் சிட்டி
கலிஃபோர்னியாவின் சோனோரன் பாலைவனத்தில் இந்த சிலப் சிட்டி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு எந்த வித சட்ட விதிகளும் கிடையாது. இந்த பகுதிக்கு அரசாங்கமோ, சட்ட திட்டங்களோ மற்றும் வரி முறைகளோ கிடையாது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் எந்த வித தலையிடல்களும் இன்றி, மிகவும் சுதந்திரமாக வாழ்கின்றனர். அரசாங்கத்தில் தலையிடல் இல்லை என்பதால் இந்த பகுதி மக்கள் சில பிரச்னைகளையும் எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Pakistan : உலகின் ஆபத்தான நகரங்கள்.. 2ஆம் இடம் பிடித்த பாகிஸ்தான்.. முதல் இடம் யாருக்கு?
பிர் டவில்
இது ஆப்ரிக்காவின் ஒரு பாலைவனமாகும். எகிப்து மற்றும் சூடானுக்கு இடையே இந்த பாலைவனம் அமைந்துள்ளது. இதை எந்த நாடும் உரிமை கொண்டாடவில்லை. சட்டப்பூர்வமாக புரக்கணிக்கப்பட்ட இடமாக இது உள்ளதால், இங்கு எந்த சட்ட விதிகளும் இல்லை.