Lebanon Pagers Attack: ஆயுதங்களாக மாறிய பேஜர்கள்… திடீரென வெடித்ததால் பரபரப்பு.. லெபனானில் இஸ்ரேல் ஆட்டம்? - Tamil News | thousands of pagers explode in lebanon several injured hezbollah blames israel | TV9 Tamil

Lebanon Pagers Attack: ஆயுதங்களாக மாறிய பேஜர்கள்… திடீரென வெடித்ததால் பரபரப்பு.. லெபனானில் இஸ்ரேல் ஆட்டம்?

Updated On: 

18 Sep 2024 12:25 PM

லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்ததில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சுமார் 2,800க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Lebanon Pagers Attack: ஆயுதங்களாக மாறிய பேஜர்கள்...  திடீரென வெடித்ததால் பரபரப்பு.. லெபனானில் இஸ்ரேல் ஆட்டம்?

பேஜர் தாக்குதல் (Picture Credit: PTI)

Follow Us On

லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்ததில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சுமார் 2,800க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் ஈரானின் லெபனானுக்கான தூதர் மொஜ்தபா அமானியும் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. லெபனானின் நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி) சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இதில் லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபிராஸ் அபியாட், சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 2,800க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தினார்.

ஆயதங்களாக மாறிய பேஜர்கள்:

இதுகுறித்து அமைச்சர் அமைச்சர் ஃபிராஸ் அபியாட் கூறுகையில், ”பேஜர் கருவிகள் வெடித்ததில் ஒரு சிறுமி உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். சுமார் 2,800 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களில்  200க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.  காயங்கள் பெரும்பாலும் முகம், கைகள் மற்றும் வயிற்றில் இருந்தன” என்று கூறினார்.

கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் ஹிஸ்புல்லா உறுப்பினர் ஒருவரின் 10 வயது குழந்தை கொல்லப்பட்டதாகவும், ஹிஸ்புல்லாவின் சட்டமியற்றுபவர்களான அலி அம்மார் மற்றும் ஹசன் ஃபட்லல்லாஹ் ஆகியோரின் குழந்தைகளும் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி.. பரபரப்பில் அமெரிக்க அரசியல் களம்!

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஹில்புல்லா அமைப்பினர் குற்றச்சாட்டியுள்ளனர். இதுகுறித்து  ஹில்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இதுவரை எதிர்கொண்ட மோசமான தாக்குதல் என்றும் மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் என்றும் ஹில்புல்லா அமைப்பு கூறியுள்ளது. அனைத்து பேஜர்களும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் வெடித்தாகவும்,  தகவல் தொடர்பு வலையமைப்பின் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் என்று ஹில்புல்லா கூறியுள்ளது.

9 பேர் உயிரிழப்பு:

பேஜர் குண்டுவெடிப்புகளுக்கு இஸ்ரேலே முழு பொறுப்பு” என்று ஹிஸ்புல்லா அமைப்பினர் கூறினர். மேலும், இந்த தாக்குதலில் ஒரு சிறுமியும் அவரது இரண்டு சகோதரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லாவில் உள்ள அதிகாரிகள் பேஜர் ஒரே நேரத்தில் வெடித்ததற்கான காரணங்களை கண்டறிய விரிவான பாதுகாப்பு மற்றும் அறிவியல் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சிறு தரப்பால் பரப்பப்படும் வதந்திகள் தவறான தகவல்களில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இது இஸ்ரேல் நடத்தும் உளவியல் தாக்குதலாக இருக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  ஹிஸ்புல்லாவின் இந்த கூற்றுகளுக்கு இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது.

இஸ்ரேல் – லெபனான் உறவு:

இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால், அங்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில், காசாவில் போர் தொடங்கியதில் இருந்து ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இயக்கம், இஸ்ரேல் பாதுகாப்பு படையினரிடம் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால், காசாவில் நடக்கும் போர் மேற்கு ஆசிய முழுவதும் பரவிவிடுமோ என்ற  உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் லெபனானில் பேஜர் மூலம் தாக்கல் நடத்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் எதுவும் கூறவில்லை. அதேநேரத்தில் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கு சம்பந்தமில்லை என்றும் எங்களுக்கு தெரியாது என்றும் அமெரிக்க விளக்கம் அளித்துள்ளது.

பேஜர் என்றால் என்ன?

பேஜர் என்பது ஒரு மின்னணு தொலைத்தொடர்பு சாதனமாகும். இது ஒரு வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனமாகும், இது எழுத்து மற்றும் சில சமயங்களில் குரல் செய்திகளைப் பெறும். இதில் பல்வேறு வகையான பேஜர்கள் உள்ளன. ஒரு வழி பேஜர் என்பது மெசேஜ்களை மட்டுமே பெற முடியும். அதேநேரத்தில் வருகிற மெசேஜ்களை பதிலளிக்க பயன்படுத்துவது இருவழி பேஜர். 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் இந்த சாதனம் கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த சாதனம் தான் தற்போது வெடித்து சிதறிய உள்ளது. இதில் தான் 2800க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் லெபனான் முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

 

 

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version