Bangladesh Protest : தீவிரமடைந்த வங்கதேச வன்முறை.. அடித்து கொலை செய்யப்பட்ட நடிகர்.. அதிர்ச்சி சம்பவம்!
Shocking News | கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு நிலமை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நிலமை மோசமாகியுள்ளது. இதன் காரணமாக அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த நிலையில் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
வங்கதேச போராட்டம் : வங்கதேசத்தில் தகுதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க கோரி மாணவர்கள் போரட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் மாபெரும் வன்முறையாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு நிலமை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நிலமை மோசமாகியுள்ளது. இதன் காரணமாக அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த நிலையில் இந்தியாவில் தஞ்சமடைந்தார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு ராணுவம் ஆட்சிய கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நிலமை கட்டுக்குள் வராத நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதின் உத்தரவிட்டார். இந்நிலையில், வங்கதேச வன்முறையில் 2 நடிகர்கள் அடித்து கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்த ஆசிரியர்.. போட்டியில் தோற்றதால் வெறிச்செயல்!
போராட்டக்காரர்களால் கொலை செய்யப்பட்ட நடிகர்கள்
வங்கதேச போராட்டத்தில் அந்நாட்டின் முன்னணி நடிகரான சாண்டோ கானையும் அவரது தந்தை செலிம் கானையும் ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செலின் கான் ஷேக் ஹசீனாவின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வரலாற்றை படமாக எடுத்துள்ளார். அதன் மூலம் தனது மகன் சாண்டோ கானை திரை துறையில் நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தான் அவர்கள் இருவரும் போராட்டக்காரர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதன்படி, சாண்டோ கானும் அவரது தந்தையும் சந்த்பூர் என்னும் பகுதியில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Today’s Cinema News: மிரட்டும் அந்தகன் வசூல்.. தனுஷ் செய்த மிகப்பெரிய உதவி.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!
போராட்டக்காரர்களால் எரித்து கொலை செய்யப்பட்ட 24 பேர்
முன்னதாக வங்கதேசத்தில் போரட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் ஆவாமி லீக் கட்சி எம்.பி-க்கு சொந்தமான ஓட்டலுக்கு தீ வைத்து கொளுத்தினர். இந்த கோர விபத்தில் 24 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், போராட்டக்காரர்களால் 24 பேர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அங்கு மக்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது முன்னணி நடிகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.