பிரதமர் வீடு மீது குண்டு வீச்சு.. நெதன்யாகுவுக்கு என்னாச்சு? பதற்றத்தில் இஸ்ரேல்!
Israel PM Netanyahu : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேசரியாவில் உள்ள அவரது வீட்டின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதலின் போது பிரதமர் நெதன்யாகு வீட்டில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேசரியாவில் உள்ள அவரது வீட்டின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதலின் போது பிரதமர் நெதன்யாகு வீட்டில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்ற தகவல் தற்போது வெளியாகவில்லை. மேலும், இந்த தாக்குதலின் பின்னணியில் ஹிஸ்புல்லா அமைப்பா அல்லது ஹமாஸ் அமைப்பு உள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் வீடு மீது குண்டு வீச்சு
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். மேலும், இதற்கு காரணமானவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதோடு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தாக்குதல் நடத்திய மூலம் உங்கள் எல்லையை நீங்கள் தாண்டி விட்டதாகவும், இதற்கு கடுமையான எதிர்வினைகள் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
Israel | Two flash bombs were fired towards Israeli PM Benjamin Netanyahu’s home in the northern Israeli town of Caesarea on Saturday and fell into the garden. Neither Netanyahu nor his family were present and there was no damage reported, reported Reuters quoting police.
— ANI (@ANI) November 17, 2024
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தொடுத்த போர், மத்திய கிழக்கு முழுவதும் பரவி இருக்கிறது.
ஹமாஸ் அமைப்பை தொடர்ந்து, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு எதிராகவும், ஈரானுக்கு எதிராகவும் போரை நடத்தி வருகிறது இஸ்ரேல். இதில் போரில் அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்பட்டனர்.
குறிப்பாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அண்மையில் நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா, துணைத் தலைவர் நபீல் கௌக் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர்.
Also Read : கண்ணில் பட்டவர்களை குத்திக் கொன்ற இளைஞர்.. 8 பேர் உயிரிழப்பு.. சீனாவில் ஷாக்!
பதற்றத்தில் இஸ்ரேல்
இது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை கிளப்பியது. இதனால் கடும் கோபம் அடைந்த ஈரான் பதிலடி தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்தது. அதன்படியே கடந்த 3ஆம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுணைத் தாக்குதலை நடத்தியது.
சுமார் 180 ஏவுகணைகளை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான், இஸ்ரேல் இடையே மோதல் போர் தொடங்கும் சூழல் நிலவி வந்தத. அதன்படியே, கடந்த மாதம் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ உற்பத்தி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இப்படியே மாறி மாறி தாக்குதல் நடத்தப்பட்டு வரும் சூழலில், நேற்று இரவு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நேரத்தில் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.
Also Read : டிரம்ப் ஆட்சியில் இருந்து தப்பிக்க வழி.. கடலிலேயே 4 வருடங்கள்.. கப்பல் நிறுவனம் வழங்கும் அதிரடி ஆஃபர்!
இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த அக்டேபார் 24ஆம் தேதி இஸ்ரேல் பிரதமர் வீடு மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் ஹில்புல்லா அமைப்பு நடத்தியதாக கூறப்பட்டாலும், அதற்கு ஹில்புல்லா அமைப்பு பொறுப்பேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.