ரூ.75 கோடி ஹெலிகாப்டரில் கசமுசா.. அதீத மதுபோதை.. சிக்கிய இரு அதிகாரிகள்!
Drunk Soldiers Caught in England: ராணுவ ஹெலிகாப்டரில் பாலியல் உறவில் ஈடுபட்ட இரண்டு அதிகாரிகள் கையும் களவுமாக பிடிபட்டனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவ ஹெலிகாப்டரின் காக்பிட் பகுதியில் இந்த பாலியல் உறவு நிகழ்ந்துள்ளது. அப்போது பெண் அதிகாரி...
ராணுவ ஹெலிகாப்டரில் இரு அதிகாரிகள் பாலியல் உறவில் ஈடுபட்டு சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. சம்பவத்தன்று வழக்கத்துக்கு மாறாக ராணுவ ஹெலிகாப்டர் காணப்பட்டுள்ளது. மேலும், ஹெலிகாப்டரில் இருந்து முனகல் சப்தம் கேட்டுள்ளது. ஹெலிகாப்டரும் குலுங்கியுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த சக அதிகாரி ஒருவர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது இங்கிலாந்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்னால் சில பாதுகாப்பு குறைபாடு அச்சுறுத்தல்களும் இருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், ஹெலிகாப்டரின் இரகசிய பகுதியில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
ராணுவ ஹெலிகாப்டரில் கசமுசா
இரு அதிகாரிகளும் ஆடைகள் இன்றி நிர்வாணமாக பாலியல் உறவில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ராணுவ உயரதிகாரிக்கு புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தை இங்கிலாந்து ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க : கண்ணில் பட்டவர்களை குத்திக் கொன்ற இளைஞர்.. 8 பேர் உயிரிழப்பு.. சீனாவில் ஷாக்!
யார் அந்த பெண் அதிகாரி
ஆண் ராணுவ வீரருடன், ஹெலிகாப்டரில் செக்ஸ் வைத்துக் கொண்ட பெண்ணும் ராணுவ வீரர் ஆவார். இவரும் இங்கிலாந்து ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் முழுமையாக நிர்வாணமாக இருந்துள்ளனர்.
அதிலும், ஹெலிகாப்டருக்குள் ராணுவ அதிகாரியின் ராணுவ உடையும், பெண் அதிகாரியின் உடையும் இருந்துள்ளது. ராணுவ அறிக்கையில், பெண் அதிகாரி சாதாரண உடையில் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
துறை ரீதியாக நடவடிக்கை
இரு ராணுவ அதிகாரிகள் பாலியல் உறவு வைத்துக் கொண்டு சிக்குவது இங்கிலாந்தைப் பொறுத்தவரை இது முதல் முறையல்ல என்றும் கூறப்படுகிறது. அதாவது, இதற்கு முன்பும் இதே போன்று சம்பவங்கள் நடந்துள்ளன.
எனினும் இம்முறை ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், இருவரும் அப்பாச்சி ரக ஹெலிகாப்டரில் உள்ள காக்பிட் பகுதியில் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் அதீத மது போதையில் இருந்துள்ளனர்.
பாதுகாப்பு குறைபாடு காரணமா?
அதிகாரிகள் எச்சரித்த பின்னர், உடையை அணிந்துக் கொண்டு வெளியே வந்துள்ளனர். ஹெலிகாப்டரின் காக்பிட் பகுதி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதனால், இச்சம்பவத்தை அதிகாரிகள் தீவிரமாக விசாரிப்பார்கள் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்ககைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், பயிற்சி மற்றும் பயன்பாடு முடிந்தவுடன் ஹெலிகாப்டரை யாரும் பயன்படுத்த முடியாத வண்ணம் பூட்டி வைக்க வேண்டும் என்றும் உயரதிகாரிகள் ராணுவ வீரர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பரபரப்பு
ஏனெனில், அவர்கள் பிடிபட்ட ஹெலிகாப்டர் இராணுவ விமானப்படையின் 653 படைப்பிரிவுக்கு சொந்தமானது. ஆனால் பாலியல் உறவில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் ராணுவத்தில் வேறு பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். ராணுவ ஹெலிகாப்டரில் இரு அதிகாரிகள் பாலியல் உறவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Miss Universe 2024 : மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற டென்மார்க் அழகி.. யார் இவர்?