5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Elon Musk | என்னை 2 முறை கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றது.. எலான் மக்ஸ் பகீர் தகவல்!

Shocking News | எலான் மஸ்க், தன்னை கடந்த 8 மாதங்களில் 2 முறை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Elon Musk | என்னை 2 முறை கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றது.. எலான் மக்ஸ் பகீர் தகவல்!
எலான் மஸ்க்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 14 Jul 2024 15:31 PM

எலான் மஸ்க் : உலகின் முதலாவது மிகப்பெரிய பணக்காரராக உள்ளவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவத்தின் நிறுவனரும் ஆவார். இவரது சொத்து மதிப்பு 221.4 பில்லியன் டாலர் ஆகும். உலக பணக்காரர் என்பதால் மட்டுமன்றி, வியக்கத்தக்க மற்றும்  அசாதாரனமான செயல்களை செய்வது, அறிவிப்புகளை வெளியிடுவதில் புகழ் பெற்றவர். இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி, எக்ஸ் என பெயர் மாற்றம் செய்து அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எலான் மஸ்க், தன்னை கடந்த 8 மாதங்களில் 2 முறை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

“என்னை கொலை செய்ய 2 முறை முயற்சி நடந்தது”

தன்னை கொலை செய்ய டெஸ்லா நிறிவனத்தின் தலைமை அலுவலகத்தின் அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, தன் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்டதை குறித்து எலான் மஸ்க் மனம் திறந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் பதிவிட்ட எலான் மஸ்க்

இது குறித்து பதிவிட்டுள்ள அவர், கடினமான காலம். கடந்த 8 மாதங்களில் 2 முறை என்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. டெஸ்லா நிறுவனத்தில் தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு 20 நிமிட பயண தூரத்தில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்

தான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என எலான் மஸ்க் முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் எலான் மஸ்க் எங்கிருக்கிறார் என்ற தகவல்களை வெளியிட்டு வந்த பத்திரிக்கையாளரின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Donald Trump: டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு.. பேரணியில் பயங்கரம்.. அமெரிக்காவில் உச்சகட்ட பரபரப்பு

அதிகாரி பதவி விலக வலியுறுத்தல்

டொனால்டு டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும், அவர் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை தடுக்க தவறிய தலைமை பாதுகாப்பு அதிகாரி பதவி விலக வேண்டும் என்றும் எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.

Latest News